1. Home
  2. News

Category: News

கௌதம் கார்த்திக் ஜோடியாக லட்சுமி மேனன்

‘சிலம்பாட்டம்’ படத்தை இயக்கிய சரவணன் அடுத்து இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிப்பது தெரிந்ததே. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தமாகியிருக்கிறார். லட்சுமி மேனன் தற்போது சசிகுமார் ஜோடியாக ‘ குட்டிப் புலி’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம்…

‘சித்தாள்’ வேலை எல்லாம் பார்த்தேன் – ‘அங்காடித் தெரு’ மகேஷ் உருக்கம்

அர்ஜுன் நடித்த ‘ஒற்றன்’, சர்வானந்த், ரவிகிருஷ்ணா, கமலினி முகர்ஜி நடித்த ‘காதல்னா சும்மா இல்லடா’ ஆகிய படங்களை இயக்கிய இளங்கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் ‘அடித்தளம்.’ ‘அங்காடி தெரு’ மகேஷ், ‘அழகன் அழகி’ ஆருஷி ஜோடியாக நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் காமெடியனாக நடித்திருக்கிறார்.  இப்படம் கட்டிடத் தொழிலாளர்களின் கதையை…

அஞ்சலி பற்றிய உண்மைகளை வெளியிடுவேன்… – களஞ்சியம்

தமிழ்த் திரையுலகின் நேற்றைய பரபரப்பு அஞ்சலியின் குற்றச்சாட்டுதான். அவருடைய சித்தி மீதும், இயக்குனர் களஞ்சியம் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார் அஞ்சலி. “நான் இதுவரை அம்மா என்று அறிமுகப்படுத்திய பாரதி தேவி, என் அம்மா கிடையாது, அவர் என் சித்திதான். என் அம்மாவும், அப்பாவும் ஆந்திராவில் இருக்கிறார்கள்.…

‘கோடி’ எல்லாம் வாங்கவில்லை – சிவ கார்த்திகேயன்

சம்பளமாக ‘கோடி’ ரூபாய் எல்லாம் வாங்கவில்லை, கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருவதை முன்னிட்டு இன்று பத்திரிகையாளர்களை சிவ கார்த்திகேயன் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்…

“பட வாய்ப்புக்காக எதையும் செய்ய மாட்டேன்” – சனா கான்

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி மலையாளம், தமிழில் எடுக்கப்படும் ‘நடிகையின் டைரி’ படத்தில் நாயகியாக சனா கான் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. டிரைலரும்  இடம் பெற்ற வசனங்களும் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. “ நடிக்கிறதுக்கு திறமை மட்டும்…

இன்றைய ரிலீஸ்…

இன்று ஏப்ரல் 5, 2013 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… சேட்டை யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கண்ணன் இயக்கியிருக்கும் படம். இசை – தமன். ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம், பிரேம்ஜி, நாசர், மற்றும் பலர் நடிக்கிறார்கள். வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் சில்வர்…

அமெரிக்காவில் ‘யான்’ பாடல்கள் உருவாக்கம்

ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிப்பில் ரவி கே. சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி நடிக்கும் ‘யான்’ படத்தில் பாடல்கள் அமெரிக்காவில் உருவாக இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.  ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்த ‘கோ ’ படத்தின் பாடல்களை விட இந்த படத்தின் பாடல்களை ஹிட் ஆக்கும்  விதத்தில்…

அஜித் புதிய படம் இன்று ஆரம்பம்…

மறைந்த  நாகி ரெட்டியாரின்  நூற்றாண்டு  விழாவை முன்னிட்டு அவரது நிறுவனமான  விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில்  பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டியின் நான்காவது தயாரிப்பில் அஜீத் குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்குகிறது. அஜீத் குமார் ஜோடியாக தமன்னா நடிக்க , விதார்த் , பாலா, முனீஸ்…

கோடிகளை அள்ளும் ‘கேடி & கில்லாடி’

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன், விமல், ரெஜினா, பிந்து மாதவி நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ கடந்த வெள்ளியன்று வெளியானது. வெளியான சில நாட்களிலேயே கோடிகளை வசூலித்துள்ளது. வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 10 கோடிக்கும் மேலாக வசூல் ஆகியுள்ளது. திங்களன்றும்…

ஸோ…பிஸி…அப்பா படத்தில் நடிக்காத ஸ்ருதி…

ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நடித்த ‘கப்பார் சிங்’ மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களின் வரிசையில் இடம் பெற்று விட்டார். அது மட்டுமல்ல, பிரபுதேவா இயக்கத்தில் ‘ராமையா ஒஸ்தாவையா’ , ‘டி- டே’ ஹிந்திப்படங்களிலும் நடித்து முடித்து விட்டார். தெலுங்கில் மட்டும் தற்போது நான்கு படங்களில் முன்னணி…