ஹனுமான் 2 – டைட்டில் போஸ்டர் வெளியீடு

‘ஹனு-மேன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் கற்பனை உலகின் அடுத்த அத்தியாயமாக ‘ஹனுமான் 2 : தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) திரைப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்க, வி. ஆனந்த் இயக்குகிறார்.

‘ஹனு-மேன்’ படத்தின் மூலம் தனித்துவமான சூப்பர் ஹீரோ கற்பனை உலகத்தை உருவாக்கிய படக்குழு, தற்போது அதன் அடுத்த கட்டமாகப் புராணம் மற்றும் பேண்டஸி அம்சங்கள் நிறைந்த புதிய உலகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

வித்தியாசமான கற்பனை மற்றும் புனைவு கதைகளைத் திரையில் சொல்லும் வி. ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். பஞ்ச வைஷ்ணவ் தேஜ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புராணப் பின்னணியையும் பிரம்மாண்டமான கற்பனை உலகத்தையும் இணைத்து இப்படம் உருவாகவுள்ளது.

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கெனவே ‘ஹனு-மேன்’ திரைப்படத்தைத் தயாரித்த இந்நிறுவனம், தற்போது சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘எஸ்.ஒய்.ஜி.’ (SYG) மற்றும் கிச்சா சுதீப் நடிக்கும் ‘பி.ஆர்.பி.’ (BRB) ஆகிய திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களைப் படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

Read Previous

ஜெயில் மேட்ஸ் – தேவா பாடிய பாடல் வெளியீடு