விஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்

விஜய் டிவியில் ‘அன்புடன் குஷி’ என்ற புதிய தொடர் வரும் ஜனவரி 27ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

கலகலப்பு நிறைந்த ஒரு காதல் கதை ஆக இத் தொடர் உருவாகி வருகிறது.

‘காதலிக்கநேரமில்லை, சின்னத்தம்பி’ தொடர்களில் நாயகனாக நடித்த பிரஜன் இத் தொடரில் அன்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அன்பு ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞன், குத்துசண்டை வீரர், எப்போதும் அனைவரிடமும் துறுதுறுவென்று கலகலப்பாக இருப்பார்.

ஆதித்யா லால் என்ற ஒரு வடக்கு இந்திதிய பணக்காரர் வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.

ஆதித்யா லாலின் மகள் குஷி, அழகான இளம் பெண். ஹாஸ்டலில் தன்படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புகிறாள்.

குழந்தைப் பருவத்திலிருந்தே குஷிக்கும், அன்புவுக்கும் மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால்அதையும் மீறி அன்பு அவளுக்கு பல சமயங்களில் உதவி செய்வார்.

குஷிக்கு தான் ஒரு சொந்த பிசினஸ் தொடங்கி சொந்த முயற்சியில் தொழிலதிபர் ஆக வேண்டும் என்பது கனவு. ஆனால் அவர்களது வீட்டில் பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் முடித்து விடுவார்கள். அவருக்கு இப்போது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. தனக்கான சொந்த வாழ்க்கையை உருவாக்க முடிவு செய்கிறாள்.

அன்புவிடம் குஷி உதவி கேட்கிறாள். இந்த சூழ்நிலையில் அந்த குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் அன்பு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்.
அவரது விசுவாசம் சோதிக்கப்படுமா, அதற்கு அன்பு என்ன செய்யப் போகிறார், குஷி என்ன செய்தாள் ? என்பதை விறுவிறுப்புடன் சொல்ல வருகிறது ‘அன்புடன் குஷி’ தொடர்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் இத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

எம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்

Read Next

பொன் மாணிக்கவேல் – டிரைலர்

Most Popular