சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, தனது புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலின் பெயர் மற்றும் அடையாளமாக ‘சோனி விழா’வை இன்று அறிமுகப்படுத்தியது.
2026 அக்டோபரில் சோனி விழா தனது ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது.
தமிழ் கலாச்சாரம், உணர்வு, மொழி மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆழமாக பிரதிபலிக்கும் பிரீமியம் விஷயங்களை வழங்குவதே சோனி விழா-வின் முக்கிய நோக்கமாகும். ஊர் மண்வாசனையுடன் உருவாகும் கதைகள், தரமான தயாரிப்பு, சிறந்த கலைத்திறன் மற்றும் பிரம்மாண்டமான அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்டு, தமிழகத்தைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் வகையில் அமைக்க படுகின்றன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாடிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலின் சிறப்பு நிகழ்வுடன் சோனி விழா-வின் பெயரும் லோகோவும் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ் பெருமையையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான பாடல்.
தமிழின் பெருமை அனைத்து திசைகளிலும் பரப்ப வேண்டும் என்ற அதன் உணர்வே சோனி விழா-வின் அடிப்படை எண்ணமாகமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மண்ணிலிருந்து உருவாகும் கதைகள் இங்குள்ள மக்களின் அன்பு, நினைவுகள், கனவுகள், ஆசைகள் மற்றும் கலாச்சாரப் பெருமையை பிரதிபலிப்பதோடு, உலகளாவிய பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட உள்ளது…
‘விழா’ என்ற தமிழ் வார்த்தைக்கு கொண்டாட்டம் அல்லது திருவிழா என்பது பொருள்.
தமிழ் கதைகள், திறமைகள், இசை, குடும்பம், கனவுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து, பார்வையாளர்களின் உணர்வுகளுடன் இணையும் ஒரு கொண்டாட்டமாக Sony VIZHA உருவாகின்றது..
சோனி விழா-வின் லோகோ- வில் மஞ்சள் மற்றும் எலக்ட்ரிக் ப்ளூ நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் நிறம் மஞ்சள் தூள் மற்றும் சாமந்திப் பூ போன்ற தமிழ்நாட்டின் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய நிறங்களிலிருந்து வேகம் பெற்றுள்ளது. எலக்ட்ரிக் ப்ளூ நிறம் நவீனத்தன்மை, பிரீமியம் தோற்றம் மற்றும் புத்துணர்ச்சியை தருகிறது.
ராஜராமன் சுந்தரம், தலைமை கன்டென்ட் அதிகாரி, தெற்குப் பிராந்தியம், சோனி பிக்சர்ஸ் நொட்வார்க்ஸ் இந்தியா, புதிய சேனல் பற்றி கூறுகையில்,
சோனி விழா மூலம் தமிழ் பொழுதுபோக்கு உலகில் நாங்கள் ஒரு மனமார்ந்த பயணத்தை தொடங்குகிறோம். வளமான படைப்பாற்றல் பாரம்பரியம், உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான மொழி மற்றும் உணர்வு, நேர்மை மற்றும் கலாச்சாரப் பெருமையுடன் கூடிய கதைகளை எப்போதும் பார்வையாளர்களைக் கொண்ட சந்தை இது.
இந்த உலகிற்குள் நாங்கள் அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற உண்மையுடனும்,விருப்பத்துடனும் நுழைகிறோம். தமிழ் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக உணரக்கூடிய அதே நேரத்தில், New Gen பார்வையாளர்களின் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் பிரதிபலிக்கும் Premium கதைகளை உருவாக்குவதே எங்களின் நோக்கமாகும்…
தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழின் பெருமை அனைத்து திசைகளிலும் பரவுவதை அழகாக சொல்லப்படுகிறது.. அந்த உணர்வே Sony VIZHA-வுக்கு வேகம் அளிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக உணர்வுகளை மையமாகக் கொண்ட, உலகளாவிய பார்வையுடன் உருவாக்கப்படும் ஒரு கொண்டாட்டமாக சோனி விழா இருக்கும்…
அக்டோபரில் இந்த சேனலை பார்வையாளர்களிடம் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
SPNI-ன் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான Kaun Banega Crorepati, Indian Idol, CID மற்றும் Crime Patrol போன்ற வெற்றிகரமான பிராண்டுகளின் அனுபவத்திலிருந்து சோனி விழா-வின் வேகம் பெறுகிறது. அதே நேரத்தில், தனித்துவமான தமிழ் குரலுடன், உள்ளூர் கலாச்சாரத்தில் உணர்வுப்பூர்வமான கதையம்சம் கொண்ட, பிரீமியம் தரத்தில் உருவாக்கப்படும் பொழுதுபோக்கை வழங்க சோனி விழா திட்டமிட்டு இருக்கின்றது..
சோனி விழா-வின் நிகழ்ச்சி பட்டியல் மற்றும் சேனல் தொடக்கம் தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
சோனி விழா என்பது சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா-வின் தமிழ் பொழுதுபோக்கு தளமாகும்.
தமிழ் கலாச்சாரம், கதைகள், இசை, உணவு, திருவிழாக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கொண்டாடும் பார்வையாளர்களுக்காக இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.
‘விழா’ எனும் தமிழ் வார்த்தையின் கொண்டாட்ட உணர்வை அடிப்படையாகக் கொண்டு அனைத்து தலைமுறை தமிழ் பார்வையாளர்களுக்காக ஒரிஜினல் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சோனி விழா வழங்க இருக்கின்றது.
‘செலிபிரிட்டி மாஸ்டர் செப் தமிழ், தமிழ் ஐடல்’ போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுடன், கலாச்சாரத்தில் உள்ள நவீன சிந்தனையுடன் கூடிய, வித்தியாசமான மற்றும் பிரீமியம் தமிழ் பொழுதுபோக்கை New Generation பார்வையாளர்களுக்கு வழங்க சோனி விழா உறுதி அளித்துள்ளது.
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா பி.லிட்., என்பது ஜப்பானைச் சேர்ந்த சோனி குரூப் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமாகும்..
இந்தியாவின் முன்னணி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றாக SPNI உள்ளது.SPNI-யில் 29 தொலைக்காட்சி சேனல்கள் உள்ளது.
இதில் இந்தி பொழுதுபோக்கு: Sony Entertainment Television, Sony SAB, Sony Pal,மராத்தியில் Sony Marathi,பெங்காலி – Sony AATH, தமிழ் – Sony VIZHA, இந்தி திரைப்பட சேனல்கள் – Sony MAX, Sony MAX 1, Sony MAX 2, Sony WAH விளையாட்டு சேனல்கள் Sony Sports நெட்ஒர்க்,குழந்தைகளுக்கான சேனல் Sony YAY,ஆங்கில திரைப்பட சேனல் Sony PIX,தகவல் மற்றும் அறிவியலிற்கு – Sony BBC Earth,டிஜிட்டல் OTT தளம் – Sony LIV,அமெரிக்கா மற்றும் கனடாவில் இலவச விளம்பர ஆதரவு கொண்ட ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி (FAST) சேனலாக Sony KAL, டிஜிட்டல் பொழுதுபோக்கு OTT தளமாக Sony LIV, மேலும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கான அசல் உள்ளடக்கங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை [IPs] உருவாக்கும் சுயாதீன தயாரிப்பு நிறுவனமாக Studio NEXT ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
SPNI-யின் சேவைகள் இந்தியாவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைகின்றன. மேலும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த சேனல்கள் கிடைக்கின்றது..
ஊடகத் துறையிலும் அதற்கு வெளியிலும் சிறந்த பணியிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள SPNI, பல்வேறு விருதுகளைப் பெற்று இருக்கிறது, அவற்றில் Great Place to Work® Institute, India வழங்கிய India’s Best Companies to Work For 2021, AVTAR & Seramount’s Most Inclusive Companies Index 2024-ல் Exemplars of Inclusion அங்கீகாரம் மற்றும் AVTAR & Seramount வெளியிட்ட இந்தியாவின் பெண்களுக்கான 100 Best Companies பட்டியலில் தொடர்ந்து 8 ஆண்டுகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கவையாகும்,
SPNI-யின் தனித்துவமான பணியிட கலாச்சாரம் மற்றும் சிறப்பான பணியாளர் நடைமுறைகளை அங்கீகரிக்கும் வகையில் ET Future Skills 2024 விருதில் Best Learning Program Supporting Change Transformation Business Strategy விருதையும்,TISS LeapVault CLO Awards 2024-ல் Best Employee Engagement Program மற்றும் Best Games Based Learning Program ஆகிய விருதுகளையும் SPNI வென்று இருக்கின்றது..
SPNI, இந்தியாவில் தனது செயல்பாடுகளின் 31-வது ஆண்டில் உள்ளது. வெளிநாடுகளில் துணை நிறுவனங்களைக் கொண்டிருப்பதோடு இந்தியாவில் MSM-Worldwide Factual Media Private Limited என்ற துணை நிறுவனத்தையும், Bangla Entertainment Private Limited என்ற இணை நிறுவனத்தையும் கொண்டு உள்ளது.