அமைதிப்படை – 2 படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்

nagarajachozhan ma mla_00001ணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ – அமைதிப்படை – 2’ படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

பல அரசியல் வசனங்கள், நக்கல், நையாண்டி என இந்த படத்தில் இருப்பதால் சென்சாரில் இந்த படம் சிக்கி சின்னா பின்னமாகி விடுமோ என்ற ஒரு அச்சம் இருந்தது. ஏனென்றால், படத்தின் டிரைலரில் கூட அனல் பறக்கும்  அரசியல் வசனங்கள் இருந்தது.

இந்த நிலையில் சென்சாருக்கு படத்தை திரையிட்ட போது, அவர்கள் ஒரே ஒரு மியூட் அதாவது வசனத்தை சத்தமில்லாமல் செய்ததோடு சரி வேறு எந்த கட்டும் கொடுக்காமல் அனைவரும் பார்த்து ரசிக்கும் விதத்தில் ‘யு ’சான்றிதழை  கொடுத்திருக்கிறார்கள்.

மே முதல் வாரம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Read Previous

உண்மை சம்பவங்களை சொல்லும் ‘வாலு’

Read Next

சேரனின் ‘கை கொடுக்கும் கை’

Most Popular