இது என்ன சேரன் இயக்கும் அடுத்த படத்தோட தலைப்பான்னு யாரும் நினைச்சிடாதீங்க…
சேரன் அடுத்தவங்களுக்கு உதவறதுக்காக ஆரம்பிச்சிருக்கிற ஒரு விஷயம்தான் இந்த ‘கை கொடுக்கும் கை’.
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் சேரன் www.directorcheran.com என்ற இணையதளத்தை புதிதாக ஆரம்பித்திருக்கிறார். இந்த இணையதளத்தில் அவர் இயக்கிய படங்களைப் பற்றியும், தயாரித்த படங்களைப் பற்றியும், நடித்த படங்களைப் பற்றியும், தற்போது பணியாற்றி வரும் படங்களைப் பற்றியும் தகவல்கள் அடங்கியுள்ளன.
அதோடு ஒரு பக்கத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கை கொடுக்கும் கை’ என்ற பதிவு செய்யும் விதத்தில் அமைந்துள்ள ஒரு பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.
படிப்பு, மருத்துவம் போன்ற உதவி தேவைப்படுபவர்கள் தகுந்த ஆதாரத்துடன் அதில் பதிவு செய்து சமர்ப்பித்தால் அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய சேரன் தயாராக இருக்கிறார்.
மேற்கண்ட ‘கை கொடுக்கும் கை’ பக்கத்திற்கு செல்வதற்கு இங்கு அழுத்தவும்.