அஞ்சலி சில நாள் காணமல் போய் பின் வெளிப்பட்டு அவருடைய நிலைமையை விளக்கினார். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது வெங்கடேஷ் ஜோடியாக நடித்து வரும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு அருகில் பஞ்சாக்னி பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பழைய உற்சாகத்துடன் கலந்து கொண்டு அஞ்சலி நடித்து வருகிறார்.
வெங்கடேஷ் – அஞ்சலி இதற்கு முன் இணைந்து நடித்த ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி சேத்து’ திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது-