ழகரம் ஸ்டுடியோஸ் – 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் சூர்யாவின் 47வது படத்திற்கு ‘சீன் – SCENE ‘ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் நவம்பர் மாதம் 6ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ சீன்- SCENE ‘ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வினித் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அஜ்மல் ஷபு மேற்கொள்ள கலை இயக்கத்தை அஸ்வினி காலே கையாண்டிருக்கிறார். காமெடி வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஜோதிகா – சூர்யா ஆகியோர் இணைந்து தயாரிருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.
சூர்யா நடிப்பில் ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என தொடர்ந்து இரண்டு படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. மூன்றாவது படமாக ‘சீன்’ வெளியாக இருக்கிறது.