கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பும், முதல் வார்வையும் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு ‘பிக்காசோ’ (‘PICASSO’) என பெயரிட்டு, அதன் முதல் பார்வையை ‘காந்தாரா’ இயக்குனர் நடிகர் ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு, பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
இப்படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்க, யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் இப்படத்தை தயாரிக்கிறார். ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் இணைந்துள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வித்தியாசமான கதை மற்றும் காட்சியமைப்புடன் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் படத்தின் உலகம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாக உள்ளது.