செல்வராகவன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்துள்ளது.
தற்போது இப்படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் வேலைகளை ஆரம்பித்து விட்டார் இயக்குனர்.
செல்வராகவன் முதன் முறையாக ஹாரிஸ், ஆர்யா, அனுஷ்கா ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் படம் என்பதாலும், எப்போதுமே செல்வராகவன் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்திற்கும் இருந்து வருகிறது.
இப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் ‘கிங் ஆப் ரொமான்ஸ்’ என அழைக்கப்படுவார் என்கிறார் இயக்குனர் செல்வராகவன்.