தனுஷைக் காக்க வைக்கும் நடிகை…

neram_00011லகப் புகழ் பெற்ற நம்ம தனுஷையே காக்க வைக்கிறாங்களா ஒருத்தர்னு தனுஷ் ரசிகர்கள் (?)  யாரும் கோபப்பட வேண்டாம்.

‘களவாணி’ சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நசீம் நடிக்கும் படம் ‘நய்யாண்டி’. இந்த படத்தின் படப்பிடிப்பை ஹீரோயின் நஸ்ரியாவிற்காக சில நாட்கள் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

நஸ்ரியா நசீம் +2 பரீட்சை எழுதச் சென்று விட்டதால்தான்தான் இந்த தாமதம். என்ன இருந்தாலும் படிப்பும் முக்கியமில்லையா ?

தமிழ்ல இருக்கிற பிஸி ஹீரோயின்ல நஸ்ரியாவும் இப்ப ஒருத்தர். தனுஷ் கூட ‘நய்யாண்டி’, ஜெய் கூட ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, புதுமுகம் நிவின் கூட ‘நேரம்’ னு ஒரே சமயத்துல மூணு படங்கள்ல நடிச்சிட்டிருக்காங்க….

நடிப்போட படிச்சிட்டும் இருக்கிறதுக்காகவே ’ நஸ்ரியா  நீங்கள்லாம் நல்லா வருவீங்க….’

Read Previous

‘ஜில்லா’ ஆரம்பமான கதை…

Read Next

‘இரண்டாம் உலகம்’ இனிதே முடிந்தது…