இன்று ஏப்ரல் 19, 2013 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்.
உதயம் NH 4
மீகா என்டர்டெய்ன்மென்ட் வழங்க, கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி தயாரிக்கும் படம். இயக்கம் – மணிமாறன், எழுத்து, படைப்பு வடிவமைப்பு – வெற்றி மாறன், இசை – ஜி.வி. பிரகாஷ் குமார், சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கௌரவம்
பிரகாஷ்ராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கியிருக்கும் படம். இசை – தமன். சிரிஷ், யாமி கௌதம், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
திருமதி தமிழ்
ராதே பிலிம்ஸ் தயாரிப்பில் இராஜகுமாரன் இயக்கியிருக்கும் படம். இசை – எஸ்.ஏ. ராஜ்குமார், இராஜகுமாரன், தேவயானி, கீர்த்தி சாவ்லா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இரு கில்லாடிகள்
ஷான்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘டென்மார்க்’ ஷான் இயக்கியிருக்கும் படம். பியாஸ், ஸ்வாதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



