காவிரி டெல்டா அல்லாத பிற மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.1,700 கோடி

tamilnadu-cmந்தியாவிலேயே முதன் முறையாக, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள, டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 3,000 முதல், 5,000 ரூபாய் வரை, நிவாரண உதவியை, தமிழக முதல்வர், ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், வருவாய் துறை அமைச்சர் வெங்கடாசலம் வெளியிட்ட அறிவிப்பு :

பருவ மழை பொய்த்தது, காவிரியில் உரிய பங்கு நீர் கிடைக்காதது ஆகிய காரணங்களால், சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்டா மாவட்ட பாதிப்புகளை அறிய, நிதி அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு, அமைக்கப்பட்டது. குழு அளித்த அறிக்கை படி, டெல்டா மாவட்டங்களில், 3.61 லட்சம் ஏக்கர் நெற்பயிர், 50 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டது, கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஏக்கர் ஒன்றுக்கு, 15 ஆயிரம் ரூபாய், நிவாரணமாக அளிக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களை தொடர்ந்து, பிற மாவட்டங்களில் வறட்சி குறித்தும், நிதி அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு, 18 மாவட்டங்களில், ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தவிர, மாவட்ட கலெக்டர்களும், வறட்சி குறித்து அறிக்கைகளை அளித்துள்ளனர்.இந்த அறிக்கைகளின் படி, டெல்டா அல்லாத மாவட்டங்களில், 50 சதவீதத்துக்கும் மேல், நெல் உற்பத்தி பாதித்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 5,000 ரூபாய், நிவாரணம் வழங்கப்படும்.

இதன்மூலம், 6.25 லட்சம் விவசாயிகளின், 6.25 லட்சம் ஏக்கருக்கு நிவராணம் அளிக்கப்படும். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, காப்பீட்டுத் தொகையை, காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.பாசன ஆதாரமுள்ள நிலங்களில், 50 சதவீதத்துக்கு மேல், மகசூல் பாதித்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 4,000 ரூபாய், நிவாரணம் அளிக்கப்படும். இதன்மூலம், ஒரு லட்சம் விவசாயிகளின், 1.25 லட்சம் ஏக்கருக்கு, நிவாரணம் வழங்கப்படும்.

பாசன ஆதாரமற்ற நிலங்களில், 50 சதவீதத்துக்கு மேல், மகசூல் பாதித்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 3,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதன்மூலம், 10 லட்சம் விவசாயிகளின், 14.14 லட்சம் ஏக்கருக்கு, நிவாரணம் அளிக்கப்படும்.

தென்னை உள்ளிட்டநீண்ட கால பயிர்களில், 50 சதவீதத்துக்கு மேல், உற்பத்தி பாதித்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 4,000 ரூபாய், அளிக்கப்படும். இதன்மூலம், 50 ஆயிரம் விவசாயிகளின், 1 லட்சம் ஏக்கருக்கு, நிவாரணம் வழங்கப்படும். இதேபோல், முசுக்கொட்டை சாகுபடி, 50 சதவீதத்துக்கு மேல் பாதித்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 3,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். 10 ஆயிரம் விவசாயிகளின், 15 ஆயிரம் ஏக்கருக்கு நிவாரணம் அளிக்கப்படும்.தமிழகத்தில், டெல்டா அல்லாத மாவட்டங்களில், 17.94 லட்சம் விவசாயிகளுக்கு, 835.21 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

“டெல்டா அல்லாத பிற மாவட்ட விவசாயிகளுக்கு, முதல்வர் அறிவித்துள்ள வறட்சி நிவாரண தொகை பட்டுவாடா, திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை துவங்கும்,” என, வருவாய் துறை அமைச்சர், வெங்கடாசலம் கூறினார்.

Read Previous

கௌரவம் – விமர்சனம்

Read Next

எல்லா அம்மாக்களுக்குமான படம் ‘கங்காரு’ – சர்ச்சை இயக்குனர் சாமி