ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன் சார்பில் உருவாகியுள்ள படம் ‘அன்பா அழகா’ இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.
ஆடியோவை இயக்குநர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டார். நடிகர் விமல் பெற்றுக் கொண்டார்.
விழாவில் இயக்குநர் எஸ்.சிவராமன் பேசும் போது “சின்ன பட்ஜெட் படமென்ற போதும் இவ்வளவு பேர் வந்ததற்கு நன்றி. பொதுவாக பத்திரிகைகள் சின்ன படம் புதுமுகங்கள் படம் என்றால் செய்தி போடுவதில்லை. விமர்சனம் எழுதுவதில்லை.
புதிய படத்தைப் பாருங்கள் நல்லா இருந்தால் நல்லா இருக்குன்னு எழுதுங்க இல்லைன்னா நல்லா இல்லைன்னு எழுதுங்க எதுவுமே எழுதாமல் இருப்பது நியாயமா? ” என்று கேட்டார். அதுமட்டுமல்ல இந்தப் படத்துக்கு ஒரு பாட்டு பாடித் தருமாறு சிம்புவிடம் கேட்டேன். ட்யூன் நல்லா இருந்தால் பாடுகிறேன் என்றார் கறாராக, ட்யூனைக் கொடுத்தேன். பிடித்து இருந்தது. உடனே பாடிக் கொடுத்தார். ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை எஸ்டிஆர். நட்பை மதிப்பவர் எஸ்.டி.ஆர் ” என்றார்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அருள் முருகன், நாயகன் ஆகாஷ் பிரபு, நாயகி ப்ரீத்தி ஆகியோரும் பேசினார்கள்.