1. Home
  2. News

Category: News

அழித்தவர்களுக்கு நன்றி – இது இராஜகுமாரன் ஸ்டைல்

மிகப் பெரிய நட்சத்திரங்களின் படமே மூன்று வாரங்கள் ஓட தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் இயக்கி, ஹீரோவாக நடித்த முதல் படத்தை 105வது நாளாக ஓட வைத்திருக்கிறார் இயக்குனரும், நடிகருமான இராஜகுமாரன். பட வெளியீட்டிற்கு பல நாட்களுக்கு முன்பே பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வந்தவர் 100 நாளைக் கடந்த…

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அனிருத்…

மூன்று படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். அதில் முதலாவதாக வெளிவந்த ‘3’ மூன்று நாட்கள் கூட ஓடவில்லை. இரண்டாவதாக வந்த ‘எதிர் நீச்சல்’ , எதிர் நீச்சல் போட்டு ஓரளவிற்கு ஓடியது. மூன்றாவது படமான ‘வணக்கம் சென்னை’ இனிமேல்தான் வெளிவர வேண்டும். இப்படி மூன்று படம் இசையமப்பதற்குள்ளாகவே தன்னுடைய சம்பளத்தை…

காதலிக்க நேரமில்லை – ‘நேரம்’ நஸ்ரியா

ஒரு ஹீரோவும், ஒரு ஹீரோயினும் ஒரு படத்துல சேர்ந்து நடிச்சால், உடனே அவங்களுக்குள்ள காதல்னு பரப்புறதே சிலருக்கு வேலையா இருக்கு. அது நேத்து வந்த ஹீரோயினுக்கும் நடக்கிறதுதான் கொடுமை. ‘நேரம்’னு ஒரு படம்தான் நஸ்ரியா நடிச்சி வெளிவந்திருக்கு. அடுத்ததா ‘நய்யாண்டி, ராஜா ராணி,திருமணம் என்னும் நிக்காஹ்’ படங்கள் வர்ற…

கல்யாண கோலத்தில் த்ரிஷா ?

செய்தியோட தலைப்பைப் பார்த்து ஏதாச்சும் தப்பா நினைச்சிக்காதீங்க…இப்பலாம் எது வேகமா பரவுதோ இல்லையோ இந்த வதந்தி மட்டும் ரொம்ப வேகமா பரவுது… த்ரிஷாவோட இந்த அழகான ஸ்டில்லைப் பார்த்ததும், இந்த ஸ்டில்லுக்காகவே ஏதாவது செய்தி எழுதணும்னு தோணுச்சி. அதான் இந்த நியூஸ்… ‘பூலோகம்’ படத்துல த்ரிஷா கல்யாண காட்சியில…

‘சீமாந்திரா’ முதல்வர் ஆகிறாரா சிரஞ்சீவி ?

ஆந்திர பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து ‘தெலுங்கானா,’ ‘சீமாந்திரா’ என்ற இரு மாநிலங்கள் இன்னும் சில மாதங்களுக்குள் உருவாக இருக்கின்றன. ஒரு பக்கம் எதிர்ப்பும், மறு பக்கம் ஆதரவும் கிளம்பி வரும் நிலையில், புதிதாக உருவாக இருக்கும் இரு மாநிலங்களின் முதல்வர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வருவதாகத் தெரிகிறது.…

ஹிந்திக்குப் போகும் ‘வேட்டை’

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த ‘வேட்டை’ திரைப்படம் விரைவில் ஹிந்தியில் தயாராக இருக்கிறது. இப்படத்தை ஹிந்தித் திரையுலகின் பிரபல இயக்குனரான கரண் ஜோஹர் தயாரிக்கவிருக்கிறார். நட்சத்திரங்கள் இன்னும் முடிவாகவில்லை. ‘வேட்டை’ திரைப்படம் தெலுங்கில் ‘தட்கா’ என்ற பெயரில்…

இமான் இசையில் பாடிய ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு பின்னணிப் பாடகியும் கூட என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நடிப்பில் பிஸியானதும் அவர் பின்னணி பாடுவதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் தற்போது இமான் இசையமைப்பில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ரவி பிரசாத் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ரவி தியாகராஜன் இயக்கத்தில் , கௌதம்…

‘ஆரம்பம்’ ஒரு அதிரடிஆக்‌ஷன் படம் – விஷ்ணுவர்த்தன்

அஜித் நடித்த ‘பில்லா’ படத்தின் மூலம் ஒரு புதுமையான மேக்கிங் ஸ்டைலை உருவாக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தன் மீண்டும் அஜித் நாயகனாக நடிக்கும் ‘ஆரம்பம்’ படத்தை இயக்கி வருகிறார். படத்தைப் பற்றி அவரிடம் கேட்ட போது, “ஆரம்பம்’  என்ற தலைப்பு எல்லோரையும்   கவர்ந்துள்ளது . இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது…

நலமுடன் இருக்கிறேன் – கனகா

நடிகை கனகாவைப் பற்றி வீண் வதந்தி இன்று பிற்பகல் முதல் பரவியது. இதனிடையே சற்று முன் நடிகை கனகா சென்னையில் சில பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.   தான் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு எந்த நோயுமில்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். கேரளாவில் உறவினர்…

நடிகை கனகா மறைவு என வதந்தி…

“கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகமான பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா மறைவு என இன்று பிற்பகல் முதல் வதந்தி நிலவியது. சில தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் செய்திகளை வெளியிட, செய்தியாளர்கள் ஒவ்வொருவரும், அது உண்மையா, பொய்யா என மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். கேரளாவில் அவர் சிகிச்சை…