சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரியாணி’ படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, கார்த்தி, யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
மிகவும் கலகலப்பாக இருந்த அந்த நிகழ்ச்சியில் ‘பிரியாணி’ படத்தின் கதை என்ன என்பதைப் பற்றி வெங்கட் பிரபு கூறினார்.
“ 11 வயதிலேயே ‘பீர்’ குடிக்கக் கற்றுக் கொள்ளும் ஒருவனுக் அவனுக்கு ‘பீர்’ குடித்தால் கண்டிப்பாக பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும். அவன் இளைஞான பின், அப்படி ஒரு நாள் ‘பீர்’ குடித்து விட்டு, பிரியாணி சாப்பிடச் சொல்லும் போது நடக்கும் ஒரு விஷயம், அவனுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் கதை. ஆனாலும், படத்தில் குடிப்பதெல்லாம் தவறு என்றுதான் சொல்லியிருக்கிறோம், ” என்கிறார்.
அவர் சொன்ன இந்த கதையை நம்பலாமா…இல்லை டிவி பேட்டிக்காக வழக்கம் போல விளையாட்டுத்தனமாகச் சொன்னாரா என்பது படம் வந்தால்தான் தெரியும்…