நடிகர் பரத் , பல் டாக்டரான ஜெஸ்லி என்பரை காதல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9ம் தேதி சென்னையில் நடக்கிறது. திருமண வரவேற்பு 14ம் தேதி நடைபெறுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் பரத். ‘காதல்’ திரைப்படத்தின் மூலம் நல்ல நடிகர் என்றும் பெயர் பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘555’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மணப்பெண் ஜெஸ்லி, பி.டி.எஸ் படித்து முடித்து , துபாயில் பல் மருத்துவராக பணிபுரிந்தவர். துபாயைச் சேர்ந்த ஜோஷ்வா – ஜெஸ்ஸி, தம்பதியரின் மகள் ஜெஸ்லி.
திருமணம் பற்றி பரத் கூறியதாவது, “நண்பர்களாக பழினோம் சில நாட்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருவரும் பேசி முடிவெடுத்தோம். எனது பெற்றோர் ஸ்ரீனிவாசன் – பாக்யலஷ்மி மற்றும் ஜெஸ்லியின் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் பதிவு திருமணம் செய்யவுள்ளோம்.
திருமணம் முடிவான உடனே என்னை அறிமுக படுத்திய இயக்குனர் ஷங்கர் அவர்களை சந்தித்து திருமணம் பற்றி கூறினேன் அவரும் அவரது மனைவியும் மனதார வாழ்த்தினார்கள், ” என்றார்.
திருமண ஏற்பாடுகளை இருவரது பெற்றோர்களும் செய்து வருகிறார்கள்.