இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
ஒரு மழை நாளில் நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு மழை நாளிலேயே முடிவுக்கு வந்தது ஆச்சரியமான ஒன்று.
எந்த மாதிரியான பரபரப்பையும் இந்த படத்திற்காக ஏற்படுத்த படக்குழுவினர் தயாராக இருப்பதன் எதிரொலிதான் ஆர்யா, நயன்தாரா திருமண ‘ஸ்டன்ட்’.
இப்படியெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் இந்த படத்தின் ஒரு பாடலான, கானா பாலா ‘அக்கபெல்லா’ முறையில் பாடிய ‘ஹே…பேபி…’ என்ற பாடல் இன்று வெளியிடப்படுகிறது.
இந்த பாடலில் இடம் பெற்றுள்ள சில வரிகள்…உங்களுக்காக…
‘மேரேஜ் மேட் இன் ஹெவென் ன்னு எவன் சொன்னான்,
கல்யாணம் கலீஜ்ஜுன்னு கஜா சொன்னான் ‘’…..
இப்படத்தின் முழு இசை வெளியீடு 23ம் தேதி நடைபெறுகிறது.