1. Home
  2. News

Category: News

பிரசாந்துடன் நடிக்கும் நர்கீஸ் பக்ரி…

‘ஸ்பை’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் நர்கீஸ் பக்ரி, பிரசாந்துடன் இணைந்து ‘சாஹசம்’ படத்திற்காக விசேஷ பாடல் காட்சியில் நடனமாட உள்ளார். இவர் ஏற்கனவே ரண்பீர் கபூருடன் ‘ராக்ஸ்டார்,’ ஜான் ஆப்ரஹாமுடன் ‘மெட்ராஸ் கபே,’ ஷாகித் கபூருடன் ‘பட்டா போஸ்டர் கிக்லா ஹீரோ’, வருனுடன் ‘மேன் தேரா…

ஃபோட்டோ விவகாரம் – ஸ்ருதிஹாசன் வருத்தம்…

ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சிகரமான ஃபோட்டோக்கள் கடந்த வாரம் வெளியாகி மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ‘எவடு’ என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஸ்ருதிஹாசன் கவர்ச்சிகரமான உடை அணிந்து நடனமாடிய புகைப்படங்கள் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகின. அந்த புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடக் கூடாதென ஸ்ருதி ஹாசன் நிபந்தனை…

‘கோச்சடையான்’ சம்பாதித்த 100 கோடி…

‘கோச்சடையான்’ திரைப்படம் இதுவரை 100 கோடி அளவிற்கு சம்பாதித்துள்ளது. தமிழ்த் திரையுலகில் எந்த படமும் நிகழ்த்தியிராத சாதனையை சில நாட்களுக்குள் படைத்துள்ளது ‘கோச்சடையான்’. கடந்த 23ம் தேதி உலகம் முழுவதும், சுமார் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 6 மொழிகளில் இப்படம் வெளியானது. நடிப்புப் பதிவு சலனத் தொழில்நுட்ப முறையில்…

தனுஷ் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி ? ஆச்சரியம்..ஆனால் உண்மை…

சினிமாவில்தான் எது எப்போது நடக்கும் என்று சொல்லவே முடியாது. டிவியில் காம்பயராக இருந்த சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோவாக வளர்த்து விட்டதில் பெரும் பங்கு தனுஷுக்குத்தான். அவரை மனைவி இயக்கத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பின்னர் நாயகனாகவும் நடிக்க வைத்து, மீண்டும் ஒரு படத்தையும் அவரை வைத்தே தயாரித்து…

‘கோச்சடையான்’ – ரஜினிகாந்த் ‘பன்ச்’ வசனங்கள்…

‘கோச்சடையான்’ படம் எதிர்பார்த்ததைப் போலவே அமோகமான வரவேற்புடன் ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களையும், குழந்தைகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்ட அரங்குகள், ஏ.ஆர்.ரகுமான் – வாலி, வைரமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள பாடல்கள், கே.எஸ். ரவிக்குமாரின் வசனம் இவை மூன்றும் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளன.…

இன்றைய ரிலீஸ் – ‘கோச்சடையான்’ மட்டுமே…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘கோச்சடையான்’ படம் இன்று வெளியாகிறது. சௌந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஆதி, ஷோபனா, நாசர் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். சலனப் பதிவு…

பாலா மாதிரி படம் எடுக்கணும்…ஒரு பெண் இயக்குனரின் ஆசை…

‘பூவரசம் பீப்பீ’….தமிழ்த் திரையுலகில் இப்போது அனைவரும் உச்சரித்து வரும் ஒரு வார்த்தை… இந்த படத்தின் புகைப்படங்களும், டிரைலரும் வெளியானதுமே ரசிகர்களின் ஆவலையும், எதிர்பார்ப்பையும் தூண்டி  விட்டது. இப்படத்தை இயக்கியிருப்பவர் ஒரு பெண் இயக்குனர்..பெயர் ஹலிதா ஷமீம். ஆனால், படைப்பாளிகளை ஆண், பெண் என வகைப்படுத்தக் கூடாது என்கிறார் ஹலிதா.…

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ – ஹாலிவுட் பட அனுபவம் கிடைக்கும்…

விஎல்எஸ் ராக் சினிமா சார்பாக வி. சந்திரன் தயாரிக்கும் படம் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய, பல விளம்பரப் படங்களை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தமன் இசையமைக்கிறார். நகுல், ‘அட்டகத்தி’ தினேஷ்,…

சிவகார்த்திகேயனுடன் பிரச்சனையா ? சந்தானம் சறுக்கலான பதில்…

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து சாதித்தவர்கள் என பார்த்தால் இந்திய அளவில்  ஷாரூக் கானுக்குத்தான் முதலிடம். தமிழக அளவில் பார்த்தால் சிவகார்த்திகேயன், சந்தானம் முக்கியமானவர்கள். சமீப காலமாக இவர்கள் இருவரும் தமிழ்த் திரையுலகை ஆட்டிப் படைத்து வருகிறார்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். கடந்த சில வருடங்களாகவே சந்தானம் தனது…

மணிரத்தினத்தை அவமானப்படுத்தினாரா மகேஷ் பாபு ?

கடந்த சில நாட்களாக மணிரத்னம் பற்றிய செய்திதான் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ‘கடல்’ படத்தின் மாபெரும் தோல்விக்குப் பிறகு நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் மணிரத்னம் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சில நாட்களுக்கு முன்…