விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ?

vijay super star newsபிரபல வாரப் பத்திரிகையான ‘குமுதம்’ இதழ் தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என ஒரு கருத்துக் கணிப்பை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது.

கருத்துக் கணிப்புகளின் முடிவை இந்த வார இதழில் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதன் படி விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டாராம். அவருக்கு 12,80,300 வாக்குகள் கிடைத்துள்ளன. அடுத்தபடியாக அஜித் 12,17,650 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சூர்யா  5,47,050 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்திலும், தனுஷ் 1,58,900 வாக்குகள் பெற்று நான்காமிடத்திலும் விக்ரம் 80,500 வாக்குகள் பெற்று ஆறாமிடத்திலும் உள்ளனர்.

தன்னை எப்போதுமே ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்துக் கொள்ளும் சிம்பு 70,350 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆர்யா 46,200 வாக்குகளும், ஜீவா 32,250 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெறாதது ஆச்சரியமளிக்கிறது.

இன்னும் கொஞ்ச நாளைக்கு விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இதன் மூலம் மோதிக் கொள்ள வாய்ப்புள்ளது.

நடக்கட்டும்…நடக்கட்டும்…

 

Read Previous

நீச்சல் உடையில் நடிக்கவில்லை… – தமன்னா

Read Next

‘கயல்’ வழக்கமான படம் இல்லை – பிரபு சாலமன்