‘கயல்’ வழக்கமான படம் இல்லை – பிரபு சாலமன்

director prabhu solomon‘மைனா, கும்கி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கி வரும் படம் ‘கயல்’.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் பி.மதன் தயாரித்து வரும் இந்த படத்தில் புதுமுகங்கள் சந்திரன், ஆனந்தி இருவரும் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இமான் படத்திற்கு இசையமைக்கிறார்.

இறுதிக் கட்டப் பணிகளில் உள்ள இப்படத்தைப் பற்றி இயக்குனர் பிரபு சாலமன் கூறியதாவது,

“இதில் காதல் இருக்கு என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால் வழக்கமான படம் இல்லை. வழக்கமான சினிமாவை பத்தாண்டுகளாக ரசிகனும் மறந்து விட்டான் படைப்பாளிகளும் மறந்து விட்டார்கள் . வேறு மாதிரியான ஒரு பாதையை நோக்கி சினிமா பயணமாகிக் கொண்டிருக்கிறது .

சுனாமி தாக்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டது. அந்த சுனாமியை இதில் கதைக் கருவாக்கி இருக்கிறேன். திரையில் ‘கயல்’ படத்தைப் பார்க்கும் போது மனசு அப்படியே பதை பதைத்து போகும். 56  டிராக் இசை படத்தை இன்னும் பல மடங்கு பிரமிப்பூட்டும் விதமாக இருக்கும்.

பருவம் அடைந்து சில மாதங்களே ஆன நாயகி வேடத்திற்கு எவ்வளவோ பேரை பார்த்தோம் திருப்தி இல்லை. முடிவில் வந்தவர் ஆனந்தி.  முகத்தில் இருந்த குழந்தைத் தனம் கச்சிதமாகப் பொருந்திப் போனார். அதே மாதிரி என்ணுடனேயே , என் கதாப்பாத்திரத்துக்கேற்ப பயணமாகிற ஹீரோவாக இருந்தார் சந்திரன். நேரம் காலம் பார்க்காமல் ஒத்துழைக்கிற ஹீரோதான் தேவை.

இந்த ‘கயல்’ எனக்கு அடுத்த வெற்றியையும் பெற்றுத் தரும், ” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் பிரபு சாலமன்.

 

Read Previous

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ?

Read Next

‘சிவப்பு’ படத்தை வெளியிடும் ராஜ்கிரண்…