‘புன்னகைப் பூ’ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ், முக்தா ஆர். கோவிந்தின் முக்தா எண்டர்டைன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சிவப்பு’.
நவீன்சந்திரா – ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்து ‘கழுகு’ சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தை ராஜ்கிரண் பார்த்து பரவசமாகி விட்டாராம் .
‘மஞ்சப்பை’ படம் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது மாதிரி ‘சிவப்பு’ படம் மிகப் பெரிய பலமாக இருக்கும் என்று நம்புகிறார் ராஜ்கிரண்.
இலங்கை அகதிகளின் வாழ்க்கைப் பதிவாக உருவாகி உள்ள ‘சிவப்பு’ படத்தை ராஜ்கிரண் வாங்கி திரையிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
அடுத்த மாதம் திரைக்கு வருகிறது ‘சிவப்பு’.