250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘எந்திரன் 2’

enthiran 2 newsதமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய பட்ஜெட் படமாக ‘எந்திரன் 2’ உருவாகலாம் எனத் தெரிகிறது. இதற்காக இயக்குனர் ஷங்கரும், ரஜினிகாந்தும் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் கூட செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஷங்கர் , ரஜினிகாந்த் இருவரும் இணைந்த இரண்டாவது படமான ‘எந்திரன்’ சுமார் 130 கோடி ரூபாய் செலவில் தயாராகி 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகச் சொல்கிறார்கள்.

‘எந்திரன்’  வெளிவந்து ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் ஆகப் போகிறது. கடந்த சில வருடங்களாக திரைப்படங்களின் பட்ஜெட்டும் எங்கேயோ போய்விட்டது. இந்த நிலையில் ஷங்கர், ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து பணியாற்றினால் அதற்கான பட்ஜெட்டை தாங்கக் கூடிய தயாரிப்பாளர் யார் என்பது கேள்விக்குறி.

அதனால்தான் இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் திரைப்படப் பிரிவு இந்த படத்தை தயாரிக்க முன் வந்துள்ளதாம்.

ரஜினிகாந்தின் சம்பளம், ஷங்கரின் சம்பளம், தயாரிப்புச் செலவுகள் என மொத்தமாக சுமார் 200 கோடி ரூபாயிலிருந்து 250 கோடி ரூபாய் வரை படத்திற்கான பட்ஜெட் வரும் என்கிறார்கள். ‘கோச்சடையான்’ படத்தைப் போன்று படத்தை பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் திரையிட்டால் 100 கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டலாம் என்றும் கணக்குப் போடுகிறார்களாம்.

அப்படி உருவாகும் பட்சத்தில் இந்தியத் திரையுலகில் முதன் முறையாக 200 கோடி ரூபாய்க்கு மேல் தயாராகப் போகும் என்ற பெருமையை ‘எந்திரன் 2’ பெறும்…

 

Read Previous

‘சிவப்பு’ படத்தை வெளியிடும் ராஜ்கிரண்…

Read Next

காளி காப்பாத்துவான்…கார்த்தி நம்பிக்கை…