கார்த்தி தற்போது நாயகனாக நடித்து வரும் படம் ‘மெட்ராஸ்’. இந்த படத்தில் ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த கார்த்தி இந்த படத்தை மிகவும் நம்பியிருக்கிறாராம். ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித் இந்த படத்தை இயக்குகிறார். சில தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்த கேரளாவைச் சேர்ந்த கேத்தரின் தெரேசா இந்த படம் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
வட சென்னைப் பகுதியைச் சேர்ந்த காளி என்ற இளைஞன் கதாபாத்திரத்தில் கார்த்தியின் நடிப்பு ரசிகர்களைக் கண்டிப்பாகக் கவரும் என்கிறார் இயக்குனர் ரஞ்சித். கார்த்தியும் அதை ஆமோக்கிறார்.
“குழந்தைகங்க, பெண்களுக்குலாம் நம்ம நடிப்பு ரொம்ப பிடிக்குதேன்னு காமெடி பக்கம் திரும்பினேன். ஆனால், நம்மள காமெடி ஹீரோவா பார்க்கிறத விட ஆக்ஷன் ஹீரோவா பார்க்கிறாங்கன்றத புரிஞ்சிக்கிட்டேன். இந்த படத்தோட கதையை புதுமுகங்களை வச்சி இயக்கத்தான் ரஞ்சித் வந்தாரு.
ஆனால், எனக்கு ரொம்ப பிடிச்சிப் போயிட்டதால நானே பண்றன்னு சொல்லிட்டேன். எல்லாருமே அவங்க வீட்டுப் பையன் மாதிரிதான் என்னை நினைக்கிறாங்க. இந்த படத்துல நான் நடிச்சிருக்கிற ‘காளி’ கண்டிப்பா என்னை காப்பாத்துவான். என்னோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உங்களுக்கும் பிடிக்கும், ” என்கிறார் கார்த்தி.
காப்பாத்துனால் சரிதான்…