ஜீ திரை – நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்

தமிழில் ஒளிபரப்பாகும் பொதுவான பொழுதுபோக்கு சேனல்கள் (GEC) பிரிவில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட் (ZEEL) தனது ஜீ தமிழ் சேனலின் மூலமாக ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது, இந்நிறுவனம் தமிழ் திரைப்பட பொழுதுபோக்கு பிரிவில் – ‘ஜீ திரை’ என்ற புதிய சேனலை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது.

தென்னிந்தியாவில் இது, இந்த நெட்வொர்க்கின் ஆறாவது சேனலாகவும், தெலுங்கில் ‘ஜீ சினிமாலு’ சேனலை அடுத்து துவங்கப் பெற்ற இரண்டாவது சினிமா சேனலாகவும் திகழ்கிறது.

ஜீ சினி அவார்ட்ஸ் 2020 நிகழ்ச்சியின் போது, இந்த சேனல் துவங்கப்பட்ட அறிவிப்பானது வெளியிடப்பட்டது.

நடிகர் கமலஹாசன் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட்டின் தலைமை நிர்வாக இயக்குனர் (உள்நாட்டு ஒளிபரப்புத் துறை) புனித் மிஷ்ரா ஆகியோர் இணைந்து இதனை அறிவித்தனர்.

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு சினிமாவின் மீதுள்ள ஆழமான சமுதாய மற்றும் கலாச்சார ரீதியான அன்பினைப் புரிந்து கொண்டும், தமிழர்களின் உணர்வுகளோடு ஒத்துப்போகும் வகையிலும் ஜீ திரை சேனல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னணி DTH ஆப்பரேட்டர்களான டாடா ஸ்கை (சேனல் எண். 1599), ஏர்டெல் DTH (சேனல் எண். 775), டிஷ் டிவி (சேனல் எண். 547) மற்றும் D2H (சேனல் எண். 547) ஆகியவற்றில் கிடைக்கும்.

கேபிள் சந்தாதாரர்கள் ரூபாய் 12 சந்தா செலுத்தி, ஜீ பிரைம் மூவி பேக் தமிழை பெறலாம்; இதில் ஜீ தமிழ், ஜீ திரை மற்றும் இதர ZEEL சேனல்கள் கிடைக்கும்.

ஜீ திரை சேனலின் அறிமுகம் குறித்து பேசிய, ZEEL நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவின் தலைவர் சிஜூ பிரபாகரன் அவர்கள் கூறியதாவது,

“இன்று, நமது சேனல்களான – ஜீ கன்னடா, ஜீ தெலுகு, ஜீ சினிமாலு, ஜீ தமிழ் மற்றும் சமீபத்தில் துவங்கப்பெற்ற ஜீ கேரளம் ஆகிய சேனல்கள் நமது நெட்வொர்க்கில் 28.5% மேலான பங்களிப்பினை வழங்குகிறது. இதன் மூலம் தென்னிந்திய மார்கெட்டில் நமக்கு உள்ள வலுவான இணைப்பு வெளிப்படுகிறது.

சினிமாவின் மீது தமிழர்கள் கொண்டுள்ள அன்பையும், பற்றையும் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பும் சினிமாவை அவர்களுக்கு வழங்கும் பொருட்டு நாம் நமது ஜீ திரை சேனலை துவங்கியுள்ளோம்.

மேலும், தமிழ் நேயர்களுக்கு நமது நெட்வொர்க் வழங்கும் சேவைகளுக்கு வலுசேர்க்கும் விதத்திலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரும்பும் ரசிகர்களின் தேடலுக்கான சிறந்த தேர்வாகவும் திகழ வேண்டுமென்ற இலக்கினை அடைவதில் இது ஒரு மைல் கல் ஆகும்.”என்றார்.

கடந்த பத்து ஆண்டுகளில், ZEEL நிறுவனத்தின் தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலான (GEC) – ஜீ தமிழ், உலகம் முழுவதும் உள்ள தமிழ் நேயர்களின் மனதிலும், இதயத்திலும் ஒரு பிரியமான இடத்தினைப் பெற்றுள்ளது. தனித்துவமான அனைத்து அம்சங்களும்  நிறைந்த இதன் நிகழ்ச்சிகளுள் செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, கோகுலத்தில் சீதை போன்றகற்பனைதொடர்களும்; சூப்பர் மாம், ச ரி க ம ப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் போன்ற நிஜ பங்கேற்பு நிகழ்ச்சிகளும்தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கிலேயே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. மேலும் இந்த சேனல் திரைப்பட உரிமைகளை பெறுவதில் முன்னணி வகித்ததன் மூலம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சரியான விகிதத்தில் வழங்கியது.

தென்னிந்தியாவில் நேயர்கள் பற்றிய புரிதல், எண்ணற்ற நிகழ்ச்சிகளின் வலிமை மற்றும் புதிய முயற்சிகளின் மூலம் கற்றுக் கொண்டவை ஆகியவற்றின் துணையுடன் இந்த நெட்வொர்க் தனது ஜீ திரை சேனலின் மூலம்திரைப்பட பிரிவில் ஒரு சவாலான இடத்தை அடைய முயல்கிறது.

இந்த சேனலின் மிகப்பெரிய அம்சமாக திகழ்வது 52 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது; அதாவது வருடம் முழுவதும் வாரம் ஒரு புதிய திரைப்படம் – தமிழ் திரைப்பட சேனல்களில் முதல் முறையாக ஒளிபரப்பப்படும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையினை பூர்த்தி செய்யும் விதத்தில், மெகாஹிட் திரைப்படங்கள் மற்றும் பலரின் பாராட்டைப் பெற்ற படங்கள் என சரிவிகிதத்தில் சிறந்த திரைப்படங்களை ஜீ திரை வழங்கும்.

ஒவ்வொரு வாரமும்வெள்ளி தோறும் ஒளிபரப்பாகவிருக்கும் ‘தெறி ஃபிரைடேஸ்”, கடந்த கால சிறந்த படங்களை வழங்கும் ‘ஃபில்ட்டர் காவியம்’ மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளம்பரம் இல்லாத ‘நடுவுல கொஞ்சம் பிரேக்க காணும்’ படங்கள் என இதுபோன்ற பல தனித்துவமான அம்சங்களை இந்த சேனல் தரவுள்ளது.

தமிழ் சினிமாத்துறையின் சிறந்த படைப்புகளை வழங்க ஒரு சேனலை துவங்கியதன் மூலம், சினிமா குறித்த உரையாடல்களை ‘என்ன’ என்பதிலிருந்து‘ ஏன்’ என்றஅ றிவார்ந்த புரிதல்களை நோக்கி செலுத்தும் இலக்கினை ஜீ திரை கொண்டுள்ளது.

‘மெர்சல், 2.0, கனா, நேர்கொண்ட பார்வை, இரும்புத்திரை, தில்லுக்கு துட்டு 2, கோலமாவு கோகிலா போன்ற சிறந்த திரைப்படங்கள் உட்பட 400-க்கும் மேலான பல வகை திரைப்படங்களை இந்த சேனல் ஒளிபரப்பும் உரிமையை வைத்துள்ளது.

Read Previous

‘தலைவி’ – அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி

Read Next

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… !

Most Popular