‘கோ’ படத்தில் ஜீவாவின் ஜோடியாக அறிமுகமானவர் கார்த்திகா. 80களின் முன்னணி நாயகியாக நடிகை ராதாவின் மூத்த மகள். அந்த ஒரு படத்திற்குப் பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமலே இருந்தார்.
தற்போது அருண் விஜய்யுடன் ‘டீல்’ படத்திலும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் தமிழில் வேறு எந்த படமும் இல்லை.
தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக நடித்தாலும், அங்கும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், தற்போது வேறு வழியில்லாமல் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க சம்மதித்துள்ளார்.
தமிழில் ‘குறும்பு, போராளி’ படங்களில் நடித்த அல்லரி நரேஷ் நடிக்கும் புதிய தெலுங்குப் படம் ஒன்றில் அவருக்கு தங்கையாக நடிக்கிறார் கார்த்திகா. நரேஷ் ஜோடியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறாராம். முன்னணி இயக்குனரான சின்னி பிரகாஷ் இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படியே நடிச்சால் தங்கச்சி கேரக்டருக்கே ‘கட்டம்’ கட்டிடுவாங்களே கார்த்திகா…