1. Home
  2. Author Blogs

Author: admin

admin

மனதில் மாயம் செய்தாய்…

‘மைனா’ படம் பலருக்கும் நல்ல வாழ்க்கையையும், திருப்புமுனையையும் ஏற்படுத்திக் கொடுத்த படம். அந்த படத்தை இயக்கிய பிரபு சாலமன் தொடர்ந்து சூப்பர் ஹிட் படமான ‘கும்கி’யை கொடுத்து முன்னணி இயக்குனர்கள்ல ஒருத்தரா இடம் பிடிச்சிட்டாரு. விதார்த் தொடர்ந்து பல படங்கள்ல ஹீரோவா நடிச்சிட்டு வர்றாரு, தம்பி ராமைய்யா பல…

‘கொத்தனாராக’ வேலை பார்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்

 இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ். ஏ. சந்திரசேகரன் சினிமாத் துறைக்கு வருவதற்கு முன் கொத்தனாராக வேலை பார்த்தேன் என்ற தகவலை முதல் முறையாக தெரிவித்துள்ளார். எஸ்.சேதுபதிராஜன் வழங்க, எஸ்.எம்.எஸ் தியேட்டர்ஸ் சார்பில் பி.எல்.ஆர். இளங்கண்ணன் இயக்கும் ‘அடித்தளம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கத்தில்…

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனிடம் ஏமாற வேண்டாம் – சென்னை போலீஸ் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் ‘கண்ணா லட்டுத் தின்ன ஆசையா’ படத்தின் மூலம் திடீரென புகழ் பெற்றவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். அவரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என சென்னை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “பவர் ஸ்டார் சீனிவாசன், மதுரை…

நண்பர்களைப் பற்றிய ‘மச்சான்’

‘மச்சான்’ னு டைட்டில் பார்த்த உடனே குடும்பக் கதைன்னு நினைச்சிட வேணாம். இது நாம நம்ம நெருங்கிய நண்பர்களை கூப்பிடுவோமே அந்த ‘மச்சான்’. அதுக்காகத்தான் ‘மச்சான்’ னு டைட்டில் வச்சிருக்கன்னு சொல்றாரு இயக்குனர் ஷக்தி சிதம்பரம். கருணாஸ், விவேக், ஷெரில் பின்டோ, கோவை சரளா, முக்கிய வேடத்தில் ரமேஷ்…

பூர்ணிமா தேசிய விருது பெற்றார்…

‘பரதேசி’ படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதை பூர்ணிமா குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். ‘பரதேசி’ படத்தில்தான் முதன் முதலாக சிறந்த ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற பெருமை அவருக்கு இந்த படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது.  

திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம்…

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கென சொந்தமாக ஒரு  கட்டிடம் சென்னை, வளசரவாக்கம், அந்தோணி சாலையில் கட்டப்பட்டுள்ளது. ‘படைப்பகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வருகின்ற திங்கட்கிழமை 06-05-2013 காலை 9.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. சங்கம் தோற்றுவிக்கப்பட்ட  நாள் முதல் இந்நாள் வரை…

‘வழக்கு எண் 18/6’ – தேசிய விருது வழங்கப்பட்டது

60வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள், மற்றும் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். தமிழில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘வழக்கு எண் ’ படத்திற்கான விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து அப்படத்தைத் தயாரித்த திருப்பதி…

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சிம்ரன், பார்த்திபன்

கௌதம் மேனன், சூர்யா மீண்டும் இணையும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சிம்ரன், பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அதில் இயக்குனர் – நடிகர் பார்த்திபன், ‘தங்க மீன்கள்’ இயக்குனர் ராம், கலை இயக்குனர் ராஜீவன், மற்றும் போட்டோன் கதாஸ் குழுவினர்…

உதவி இயக்குனர்களுக்காக ‘உ’ படத்தில் ஒரு பாடல்…

இந்தியாவின் முதல் சினிமா “ராஜா ஹரிச்சந்திரா” 1913ம் ஆண்டு மே 3 ஆம் தேதி வெளியானது. இன்றுடன் இந்திய சினிமா துவங்கி நூற்றாண்டு நிறைவடைந்ததை ஒட்டி, உதவி இயக்குநர்களுக்காக “உ” திரைப்பட குழுவினர் ஒரு பாடலை உருவாக்கி உள்ளனர். அபிஜித் ராமசுவாமி இசையில் முருகன் மந்திரம் எழுதி உள்ள…

அகடம் – டிரைலர் வெளியீடு

லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முகமது இசாக் இயக்கத்தில் பாஸ்கர் இசையமைப்பில் தமிழ், சீனு ஐயர், ஸ்ரீ பிரியங்கா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் டிரைலரை இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அபிராமி ராமநாதன் வெளியிட்டார்கள். இத் திரைப்படத்திற்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட…