திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம்…

tantisமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கென சொந்தமாக ஒரு  கட்டிடம் சென்னை, வளசரவாக்கம், அந்தோணி சாலையில் கட்டப்பட்டுள்ளது.

‘படைப்பகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வருகின்ற திங்கட்கிழமை 06-05-2013 காலை 9.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

சங்கம் தோற்றுவிக்கப்பட்ட  நாள் முதல் இந்நாள் வரை தலைவர்களாக இருந்த இயக்குனர்கள் டி.எ. வின்சென்ட் (1975), தாசரி நாராயணராவ் (1977), டி. ராஜேந்தர் (1988), கிருஷ்ணன் முன்னாட் (1989), மோகன் காந்திராமன் (1989), ஜி.எம்.குமார் (1991), எஸ்.ஏ. சந்திரசேகரன் (1992), ஆர்.சி. சக்தி (1993) ஆகியோர் முன்னிலையில் இயக்குனர்கள்  கே. பாலசந்தர்,  பாரதிராஜா  இருவரும் திறந்து வைக்கிறார்கள்.

விழாவிற்கு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, இயக்குனர் ஹரி தலைமை தாங்குகிறார்கள்.

விழா ஏற்பாடுகளை சங்கப் பொதுச்செயலாளர் இயக்குனர் ஹரி, சங்கப் பொருளாளர் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்று செய்து வருகிறார்கள்.

Read Previous

‘வழக்கு எண் 18/6’ – தேசிய விருது வழங்கப்பட்டது

Read Next

பூர்ணிமா தேசிய விருது பெற்றார்…

Most Popular