கௌதம் மேனன், சூர்யா மீண்டும் இணையும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சிம்ரன், பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்.
இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அதில் இயக்குனர் – நடிகர் பார்த்திபன், ‘தங்க மீன்கள்’ இயக்குனர் ராம், கலை இயக்குனர் ராஜீவன், மற்றும் போட்டோன் கதாஸ் குழுவினர் கலந்து கொண்டனர்.
சூர்யா அறிமுகமான ‘நேருக்கு நேர்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடித்த சிம்ரன் , கௌதம் மேனன் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.
பார்த்திபன் முதன் முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார்.
படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிக்க தமிழ் பேசத் தெரிந்த ஒரு நாயகியை கௌதம் மேனன் தேடி வருகிறாராம்.
யாருக்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதோ ?