1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘ராஜா ராணி’ – செப்.18 டிரைலர் வெளியீடு…

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘ராஜா ராணி’. இப்படத்தை அட்லீ இயக்குகிறார். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீடு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. அட்லீயை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துவது பெருமையாக…

‘555’ – 5 நாள் முன்னாடியே ரிலீஸ்…

சென்னை சினிமாஸ் திரைப்பட நிறுவனம் தயாரிப்பில் ‘சொல்லாமலே’ சசி இயக்கத்தில் பரத், எரிக்கா பெர்னாண்டஸ், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘555’ திரைப்படம் நாளை 10ம் தேதி வெளி வருகிறது. முதலில் இந்த படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடுவதாக இருந்தார்கள். ரம்ஜான் மற்றும் விடுமுறை நாட்களை கணக்கில்…

‘தலைவா’ – எப்போது ரிலீஸ் ?

‘தலைவா’ படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரிவிலக்கு இல்லாமலும், அரசின் ஆதரவு இல்லாமலும் படத்தை வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதையடுத்து, என்ன செய்யலாம் என படக்குழுவினரும், திரையுலகத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து பேசி வருவகின்றனர். ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ள…

‘தேசிங்கு ராஜா’ – 23ம் தேதி ரிலீஸ்…

“தேசிங்கு ராஜா”படம் இம்மாதம் (ஆகஸ்ட் ) 23 ஆம்  தேதி 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. விமல் கதாநாயகனாக நடித்து அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் ‘தேசிங்கு ராஜா’தான் என்று எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மதன் , இயக்குனர் எழில் கூறினார்கள். தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வரும்…

‘தலைவா’ – வெளியாவதில் சிக்கல்…

வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ‘தலைவா’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை பாதுகாப்பு கருதி நிறுத்தப் போவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இன்று சென்னையிலுள்ள ஐநாக்ஸ் திரையரங்கிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து திரையரங்குகளில் சோதனை நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் ‘தலைவா’ வெளியாகும் திரையரங்குகளில் முன்பதிவு நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்கம்…

‘தலைவா’ அரசியல் படமல்ல – விஜய்

பேருதான் ‘தலைவா’, ஆனால் அரசியல் படமல்ல என சொல்கிறார் விஜய். இது சம்பந்தமாக விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தலைவா’ படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்’ ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல்…

அஜித்தின் ‘ஆரம்பம்’ – ஒரு பின்னணித் தகவல்…

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆரம்பம்’ படத்தின் டைட்டில் நீண்ட காலமாக அறிவிக்கப்படாமல் இருந்து திடீரென ஒரு நாள் எந்த டிசைனும் வெளியிடப்படாமல் அறிவிக்கப்பட்டதன் பின்னணி காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த படத்திற்காக ஆரம்பத்திலிருந்தே பல டைட்டில்களை படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் சொல்லி வந்தாராம். ஆனால் ஒன்று…

சிம்ரனைக் கவர்ந்த ஹன்சிகா…

என்ன இது…சிம்புதான ஹன்சிகாவைக் கவர்ந்துட்டாரு…நாங்க என்னமோ சிம்ரன்னு..தப்பா எழுதிட்டம்னு ஃபீல் பண்ணாதீங்க… 90களோட நம்பர் 1 நடிகை சிம்ரன் சமீபத்திய பேட்டில அவங்களுக்குப் பிடிச்ச இன்றைய ஹீரோயின்னு ஹன்சிகாவை சொல்லியிருக்காங்க. ஹன்சிகா கிட்ட அவங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்னன்னு கேட்டதுக்கு சிம்ரன் சொன்ன பதில், இதோ… “துறுதுறுன்னு இருக்காங்க…ரொம்ப…

எனக்கு காதல் கல்யாணம்தான் – ஆர்யா

இப்ப இருக்கிற முக்கியமான பிரச்சனைகள்ல ஒன்னு ஆர்யா யாரைக்காதலிக்கிறாரு.. நயன்தாராவையா..இல்ல..அனுஷ்காவையா… ஆனால், இவங்க யாருமே என்னோட காதலி கிடையாதுன்னு சொல்றாரு ஆர்யா. தமிழ் சினிமாவுல இருக்கிற அழகான பேச்சிலர் நடிகர்ல இவரும் ஒருத்தர். எந்த ஹீரோயின் கூட நடிச்சாலும் அவங்களுக்கும் இவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடும்னு…

5 நிமிட நடிப்புக்கு 15 லட்சம்…

சன்னி லியோன்…இந்த பெயரைத் தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கனடா நடிகையான இவர் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்து அதிகமான புகழைப் பெற்றவர். ‘ஜிஸ்ம் 2’ ஹிந்திப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்போது ‘ராகினி எம்எம்எஸ் 2’ என்ற இந்திப்…