‘சாட்டை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மகிமா. தற்போது “சாட்டை” படத்தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் தயாரிக்க எம்.ஜீவன் இயக்கும் “மொசக்குட்டி” விஜய் வசந்த் ஜோடியாக பி.ராஜபாண்டியன் இயக்கும் “என்னமோ நடக்குது” மற்றும் வெங்கட் இயக்கும் “புறவி150 CC “ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
“நானும் மற்ற கேரள நாயகிகளைப் போல நல்லா வருவேன்”, என்கிறார் மகிமா.
“கவர்ச்சியை வைத்துக் கொண்டு மட்டும் காலத்தை ஓட்ட முடியாது ஒரு கட்டத்தில் கவர்ச்சி ரசிகர்களுக்கு போரடித்து விட்டால் தூக்கி எரிந்து விடுவார்கள் கதைக்கு தேவைப் படும் அளவிற்கு கவர்ச்சி தவறில்லை நான் எப்போதும் ஆபாசம் என்கிற ஆயுதத்தை போட்டிக்காக எடுக்க மாட்டேன்.
இதுவரை தமிழ் நாட்டில் கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு நல்ல மார்கெட் இருந்திருக்கிறது, வரவேற்பு இருக்கிறது அந்த வரிசையில் எனக்கு ஒரு சிம்மாசனம் உங்க மனசுல போடப்படும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்கிறார் மகிமா.
ஆசைப்படறாங்க…ஆதரவு கொடுங்க மக்களே…