ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ், தி நெக்ஸ்ட் பிக் பியூப்பிள் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் ‘ராஜா ராணி’ திரைப்படம் இம்மாதம் 27ம் தேதி வெளியாகிறது.
அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் ஆர்யா – நயன்தாரா ஜோடி, இன்றைய இளைஞர்களின் புது கனவுக் கன்னி, சந்தானத்தின் நகைச்சுவை என பல விதங்களில் ஈர்த்து, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் கூறுகையில், “படத்தைப் பார்த்து நான் மிகவும் ரசித்தேன். பல காட்சிகளில் சிரித்தேன், சில காட்சிகளில் அழுதேன். என்னை அதிகமாகவே இந்த படம் கவர்ந்து விட்டது. இயக்குனர் அட்லீயை நினைத்து பெருமைப்படுகிறேன். நடித்துள்ள அனைவருமே மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். ரசிகர்களையும் இந்த படம் அதிகமாக கவரும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என்றார்.