வெற்றி வந்ததும் பழசை மறைக்கும் இயக்குனர்…

vvs working stills_00004‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பொன்ராம் என்றுதான் பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இவர் ஏற்கெனவே ஹரிகுமார், பிரியங்கா நடித்து 2007ம் ஆண்டு வெளிவந்த  ‘திருத்தம்’ என்ற தோல்விப் படத்தை இயக்கியவர் என்பது பலருக்குத் தெரியவில்லை.

இயக்குனர் பொன்ராமும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’தான் தன்னுடைய முதல் படம் என பேசி வருகிறார். அவருக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்தவரைப் பற்றியும், அந்த படத்தைப் பற்றியும் பேச மறந்து விடுகிறார்.

இந்த நிலையில், லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் பொறுப்பு பூபதிபாண்டியனிடமிருந்து பொன்ராமுக்கு மாறியிருக்கிறது.

பூபதிபாண்டியனை நீக்கக் காரணம் சமீபத்தில் அவர் இயக்கிய ‘பட்டத்து யானை’ தோல்விப்படமாக அமைந்ததாம்.

இந்த புதிய படத்திற்கு பொன்ராமுக்கு கோடி ரூபாய் சம்பளம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

வெற்றி வந்தால் ‘பொன்’…தோல்வி வந்தால் ‘பித்தளை’ என்பது பொன்ராமுக்கு தெரியாமலா இருக்கும்…

Read Previous

சின்னத்திரையிலிருந்து மேலும் ஒரு நடிகர்…

Read Next

விளம்பரத்தில் இணையும் காதல் ஜோடி…