இந்திய சினிமா நூற்றாண்டு விழா 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று முதல் அனைத்து படப்பிடிப்புகளும் ஏழு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.
இந்த விழாவை தமிழக முதலமைச்சர் 21ம் தேதியன்று துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார்.
21ம் தேதி மாலை தமிழ் நட்சத்திரங்களும், 22ம் தேதி காலை கன்னட நட்சத்திரங்களும், 22ம் தேதி மாலை தெலுங்கு நட்சத்திரங்களும், 23ம் தேதி காலை மலையாள நட்சத்திரங்களும் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ரேயா, லட்சுமி ராய் உள்ளிட்ட எண்ணற்ற நடிக , நடிகையர் நடனமாக இருக்கிறார்கள்.
இதற்கான ஒத்திகை மற்றும் விழா ஏற்பாடுகளை தங்கு தடையின்றி கவனிக்க இன்று முதல் 24ம் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. வெளிநாட்டு படப்பிடிப்புகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.