ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ ஆரம்பம்

vai raja vai launch‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா தனுஷ் அடுத்து இயக்கும் ‘ வை ராஜா வை ’ படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.

கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா.

இன்று படத்தின் கதாநாயகன் கௌதம் கார்த்திக்கின் பிறந்த நாள் என்பது ஒரு சிறப்பு.

இயக்குனர் பாலா,வெற்றிமாறன், ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன்  மற்றும்  படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோர் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.

படப்பிடிப்பில் கதாநாயகன் கெளதம் கார்த்திக் , கதாநாயகி பிரியாஆனந்த், விவேக்,இயக்குனர் எஸ்.எம்.வசந்த் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் பங்கு பெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.

Read Previous

பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கயல்’

Read Next

இன்றைய ரிலீஸ்…

Most Popular