1. Home
  2. Author Blogs

Author: admin

admin

கோடி கோடியாக சம்பாதிக்கும் ‘கோலி சோடா’

ஒரே அடியில ஐந்து பேரை வெட்டி சாய்க்கிற ஹீரோ கிடையாது,  ஃபாரின்ல போய் பாட்டு ஷுட்டிங் நடத்தலை, பிரம்ம்ம்ம்ண்டமான அரங்குகள் கிடையாது, கலர் கலரா உடையணிந்து வர்ற ஹீரோயின்கள் கிடையாது, இதெல்லாம் எதுவுமே இல்லாம ஒரு படம் கோடி கோடியா சம்பாதிக்குதுன்னா சும்மாவா… அந்த பெருமை விஜய் மில்டன்…

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

இன்று 7 பிப்ரவரி 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்.. புலி வால் மேஜிக் பிரேம்ஸ் தயாரிப்பில் ஜி.மாரிமுத்து இயக்கத்தில் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள படம். பிரசன்னா, விமல், ஓவியா, அனன்யா, சூரி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பண்ணையாரும் பத்மினியும் மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ்…

தெருவுக்கு வந்த விஜய் சேதுபதி…

தலைப்பைப் பார்த்து எதுவும் தப்பா நினைச்சிக்காதீங்க…எல்லாம் படத்தோட விளம்பரம்தான் இது. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா நடித்துள்ள ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படம் நாளை வெளிவர உள்ளது. இப்படத்திற்காக தெருத் தெருவாக , ரிக்ஷாவில் கட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டருடன் விஜய் சேதுபதி ரிக்ஷா ஓட்டி படத்தை விளம்பரப்படுத்தினார். அந்த காலத்திலெல்லாம் ஒரு…

தனுஷ் நடிக்கும் அடுத்த ஹிந்திப் படம் இன்று ஆரம்பம்…

தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ், ‘ராஞ்சனா’ என்ற படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகிலும் அறிமுகமானார். சென்ற ஆண்டு வெளிவந்த அந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து, தனுஷுக்கு சென்ற ஆண்டிற்கான சிறந்த புதுமுக நடிகர் என்ற ஃபிலிம் பேர் விருதையும் பெற்றுத் தந்தது.…

யாரையும் காதலிக்கவில்லை – அதர்வா

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு படு பிஸியாக இருக்கிறார் அதர்வா. அதே வேகத்தில் அவரைச் சுற்றி வரும் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லை. அதர்வா தற்போது, “இரும்புக் குதிரை, ஈட்டி, கணிதன்,” ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் அவரையும் பல ஹீரோயின்களையும் சுற்றி காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.…

அவ்வளவு சீக்கிரம் துரத்தாதீங்க – ஜனனி ஐயர்

பாலா இயக்கிய ‘அவன் இவன்,’ மற்றும் ‘பாகன்’ படங்களில் ஹீரோயினாக நடித்த ஜனனி ஐயர் தற்போது நடித்து வரும் படம் ‘தெகிடி’. தமிழை விட மலையாளத்தில் “கூதரா, செவன்த் டே, மோசையில் குதிர மீனுகள், எடிசன் போட்டோஸ்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் சில…

பாலா படத்தில் சசிகுமார் ஜோடியாக ஸ்ரேயா ?

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா அடுத்து சசிகுமாரை நாயகனாக வைத்து இயக்கும் படத்தில் , ஸ்ரேயா நாயகியாக நடிக்கலாம் எனத் தெரிகிறது. தமிழில் 2011ம் ஆண்டு வெளிவந்த ‘ரௌத்திரம்’ படத்திற்குப் பிறகு ஸ்ரேயா எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. இதே நிலைமைதான் தெலுங்கிலும். ஒரு காலத்தில் அங்கும் முன்னணி…

கமல் படத்திலிருந்து யுவன் நீக்கம்…?

கமல்ஹாசன் , ‘விஸ்வரூபம் 2’ படத்திற்குப் பிறகு நடிக்கவிருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தின் இசையமைப்பாளராக ஏற்கனெவே ஒப்பந்தம் செய்யப்பட்ட யுவன் ஷங்கர் ராஜா படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…

புது நடிகரை மிரட்டிய இயக்குனர்…

திரிலோக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரிலோக் சுரேந்திரன் பிள்ளை பந்தலம் தமிழில் முதல் முறையாக தயாரித்துள்ள படம் ‘சூறையாடல்.’ தாமரை கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுக நடிகர் ஸ்ரீபாலாஜி, காயத்ரி, லீமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மிதுனேஷ்வர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்…

இயக்குனருக்கு அஜித் செய்த உதவி…

சினிமாவில் மட்டும்தான் தோல்வி அடைந்தவர்களை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஓரம் கட்டி அழகு பார்ப்பதும் நடக்கும். ஒருவரால் பணம் வருகிறது, லாபம் கிடைக்கிறது என்றால் மட்டுமே அவர்களை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடும் உலகம் இது. கடினமான நேரத்தில்  கை தூக்கி விட்டவர்களைக் கூட தூக்கி தூர எறிந்த…