‘உத்தம வில்லன்’ – 3ம் தேதி ஆரம்பம்…

uthama villain first look imageகமல்ஹாசன் கதாநயாகனாக நடிக்கும் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் நாளை மறுநாள் 3ம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது.

திருப்பதி பிரதர்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதையை கமல்ஹாசன் அமைக்க, கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.

படத்தின் நாயகிகள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.பல கதாநயாகிகளின் பெயர்கள் செய்திகளில் அடிபட்டாலும் அதிகாரபூர்வமாக யார் என்பதை இன்னும் சொல்லாமலே இருக்கிறார்கள்.

ஒரு குறுகிய கால தயாரிப்பாக இப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை முடித்து விட்டு கமல்ஹாசன் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார்.

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ கோடை விடுமுறையில் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஆக, இந்த ஆண்டு கமல் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

Read Previous

தனுஷ் வருத்தத்திற்கு யார் காரணம் …. ?

Read Next

பனி விழும் மலர்வனம் – விமர்சனம்