‘துள்ளுவதோ இளமை’ யில் ஒரு நடிகராக தனுஷ் அறிமுகமான போது, இவரெல்லாம் எங்கே வெற்றிப் படங்களைக் கொடுக்கப் போகிறார், தேசிய விருதுகளை வாங்கும் அளவுக்கு உயர்வார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால், அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி சிறந்த நடிகராக தன்னை உயர்த்திக் கொண்டு தேசிய விருது வாங்கி, ‘கொலை வெறி’ பாடல் மூலம் உலக அளவில் புகழ் பெற்று, ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் ஹிந்திப் படத்திலும் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கும் அறிமுகமானார் தனுஷ்.
இப்போது பால்கி இயக்கத்தில் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில், இளையராஜா இசையமைப்பில், அமிதாப்பச்சனுடன் மற்றுமொரு ஹிந்திப் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.
சற்று முன் அவருடைய சமூக வலைத்தளத்தில் அவர் போட்ட செய்திகள் அவருக்குள் இருக்கும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்து. அதற்கு யார் காரணம்….?
“என்னைப் பற்றிக் கணித்தவர்கள் பலரைக் கடந்து வந்திருக்கிறேன். நான் சொல்ல வேண்டியதெல்லாம் ஒண்ணுதான், நான் நல்லவனோ கெட்டவனோ, எல்லாரையும் மாதிரி நானும் சாதாரணமானவன்தான்.
ஒரு மனுஷனா என் கிட்டயும் குறைகள் இருக்கு. ஆனால், நான் என் தொழிலுக்கும், ரசிகர்களுக்கும் உண்மையானவன். விசுவாசமானவன்.
ஒவ்வெரு காட்சியிலயும் என்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்ட முயற்சிக்கிறேன். மத்ததைப் பத்தி எனக்குக் கவலையில்லை.
காமிராவுக்கு முன்னாடிதான் என்னுடைய சிறந்த நடிப்பைக் காட்டுவேன். காமிராவுக்கு பின்னாடி என்னைக்குமே நடிச்சதில்லை. நல்லவனோ, கெட்டவனோ, மோசமானவனோ…நான் நானா இருக்கேன், ” என அவருடைய வருத்தத்தை வெளிக்காட்டியுள்ளார்.
தனுஷை இந்த அளவிற்கு வருத்தப்பட வைத்த அந்த நபர்(கள்) யாரோ….?
