‘எதிர் நீச்சல்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – இயக்குனர் துரை செந்தில்குமார் மீண்டும் இணையும் படத்திற்கு ‘டாணா’ என பெயரிட்டிருக்கிறார்கள்.
அனிருத் இசையமைக்க, ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கும் இப்படம் வரும் 6ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.
தனுஷ், அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான உண்டர் பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
அந்த காலத்தில் காவல் துறையினரை ‘டாணா’ என அழைப்பது வழக்கம். இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸாக நடிக்கிறார்.
சீரியஸ் போலீஸாக இருந்தாலும் கண்டிப்பாக சிரிக்க வைக்கும் போலீஸாகவும் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.