ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் அனிமேஷன் திரைப்படமான ‘கோச்சடையான்’ படத்தின் தியேட்டர் டிரைலருக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளுக்கான டிரைலருக்கு ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. .
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அநேகமாக அன்று முதல் தியேட்டர் டிரைலர்களும் உலகம் முழுவதும் திரையிடப்படும் எனத் தெரிகிறது.
தெலுங்கு பதிப்பிற்கான இசை வெளியீடு 10ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரகுமான் உட்பட ‘கோச்சடையான்’ குழுவினர் மற்றும் இந்திய திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.