நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.
யுவராஜ் இயக்கத்தில் இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் மீனாட்சி தீட்சித் நாயகியாக நடிக்கிறார்.
புலமைப்பித்தன், விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர். வரலாற்றுப் படமான இந்த படம் வடிவேலுவின் முந்தைய வரலாற்றுப் படமான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ அளவிற்கு பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறையில் வெளிவர உள்ள ‘கோச்சடையான்’ படமும் வரலாற்றுக் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி படத்துடன் வடிவேலுவும் களத்தில் குதிக்க உள்ளார். ஆக , இந்த விடுமுறை சின்ன பசங்களுக்கும் கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.