1. Home
  2. News

Category: News

விரைவில் விஸ்வரூபம் – 2 அறிவிப்பு…

தடை பல கடந்து வெற்றி வாகை சூடி வருகிறது விஸ்வரூபம். தமிழ்நாட்டில் கடந்த வாரம்தான் வெளியானது. இன்று வரை பல காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக தொடர்ந்து வருவதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களிலும் வசூல் நிலவரம் நன்றாகவே உள்ளதாகத் தெரிகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில்…

‘கல்யாண சமையல் சாதம்’ – ஒரு கல்யாண கலாட்டா

பிரசன்னா, சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு ‘திரைப்படத்தைத் தயாரித்த ஆனந்த் கோவிந்தன், அருண் வைத்தியநாதன் அடுத்து ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். பல குறும்படங்களை இயக்கி விருதுகளை வென்ற ஆர்.எஸ். பிரசன்னா இந்த படத்தை இயக்குகிறார். ஒரு திருமணம் , அதைச் சுற்றி நடக்கும்…

துபாயில் அஜித் பட ஷுட்டிங்…

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற உள்ளது. இதற்காக தனது குழுவினருடன் இன்று துபாய் புறப்பட்டுச் செல்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். துபாயில் நடைபெறும் படப்பிடிப்பில் ஒரு சில சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கப்படலாம் எனத் தெரிகிறது. நிறைய வேலைகள்…

‘தீயா வேலை செய்யும் சுந்தர் .சி,’ புகழும் ஹன்சிகா

நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகி மீண்டும் பரபரப்பான இயக்குனராகி விட்டவர் இயக்குனர் சுந்தர் .சி.  தற்போது, சித்தார்த், ஹன்சிகா நடிக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் சுந்தர் . சி. வேலை பார்க்கும் விதத்தைப் பார்த்து அவரை ஹன்சிகா அட்டகாசமாகப் புகழ்ந்து…

‘தலைவா’ பாடல்கள் ‘எல்லாமே சரவெடிதான்’ – ஜிவி. பிரகாஷ்

விஜய் , அமலா பால் நடிக்க விஜய் இயக்கி வரும் படத்திற்கு அதிரடியான பாடல்களை உருவாக்கி வருகிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார். விஜய் நடிக்கும் படத்திற்கு ஜிவி இசையமைப்பது இதுவே முதல் முறை.  இயக்குனர் விஜய் இயக்கத்தில் வந்த  கிரீடம்,  மதராசபட்டிணம், தெய்வத் திருமகள், தாண்டவம்,  படங்களைத் தொடர்ந்து…

தமிழில் இரண்டு படங்களில் காஜல் அகர்வால்

கடந்த வாரம் ஒரு பத்திரிகை பேட்டியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் காஜல் அகர்வால். ஆனால், அதன் பின் தான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என வருத்தப்பட்டார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளுக்குமே  தான் மரியாதை கொடுப்பவள் என விளக்கமளித்தார். தமிழில் இரண்டு படங்களில் விரைவில் நடிக்க…

இரு வேடங்களில் அனுஷ்கா

இரு வேடங்களில் அனுஷ்கா

அனுஷ்கா தற்போது சூர்யா ஜோடியாக சிங்கம் 2, ஆர்யா ஜோடியாக இரண்டாம் உலகம், ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இதில் செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கதாபாத்திரம் பழங்குடிப் பெண் கதாபாத்திரமாம். இந்த படத்தின் கடைசி…

வட இந்தியாவிலும் பாலாவின் ‘பரதேசி’

பாலாவின் ‘பரதேசி’ திரைப்படம் வட இந்தியாவிலும் வெளியாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் ‘பரதேசி’ படத்தை தனது பேன்டம் பிலிம்ஸ் லிட்  நிறுவனம் மூலம் வட இந்தியாவில் வெளியிடுகிறார். பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பாலாவின் ‘பரதேசி’ படத்தை வட இந்தியாவில் உள்ளவர்களும் பார்த்து…

‘கடல்’ வியாபாரம் – எங்களுக்கு தொடர்பில்லை – மெட்ராஸ் டாக்கீஸ்

‘கடல்’ திரைப்பட வெளியீட்டால் நஷ்டம் அடைந்ததாகக் கூறப்பட்ட வினியோகஸ்தர்கள் மணிரத்னம் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திடமிருந்து பத்திரிகைகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, ”கடல் திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு வெளியிட்டு உரிமைகளை மெட்ராஸ் டாக்கீஸ், மார்ச் மாதம் 2012லேயே…

பிரசாந்த் படம் இயக்கவில்லை – ராஜமௌலி

‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலம் அடைந்தவர் தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி. தற்போது பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடிக்கும் ‘பாகுபலி’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளார். இதனிடையே ‘பாகுபலி’ படம் முடிந்ததும் ராஜமௌலி பிரசாந்த் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக…