கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ அடுத்த மாதம் ஆரம்பம்

karthi-and-kajal-agarwalசிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி – ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து  ராஜேஷ் இயக்கும் புதிய படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’.

இந்த படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், சரண்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசை – தமன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. கார்த்தி தற்போது நடித்து வரும் ‘பிரியாணி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.  இருந்தாலும், இரு படத்தின் படப்பிடிப்பையும் ஒரு சேர நடத்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

 

Read Previous

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் ‘திருடன்’

Read Next

விஜய், மோகன்லால் நடிக்கும் ‘ஜில்லா’ மே மாதம் ஆரம்பம்