விஜய், மோகன்லால் நடிக்கும் ‘ஜில்லா’ மே மாதம் ஆரம்பம்

vijay-and-mohanlalவிஜய் தற்போது விஜய் இயக்கத்தில் ‘தலைவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் அடுத்து நடிக்கப் போகும் படம் ‘ஜில்லா’. இந்த படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். நேசன் இயக்கும் இந்த படத்திற்கு இசை இமான்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத் தகவலை மலையாள நடிகர் மோகன்லாலே வெளியிட்டுள்ளார். மே மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் – மோகன்லால் புதிய கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

 

Read Previous

கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ அடுத்த மாதம் ஆரம்பம்

Read Next

விஸ்வரூபம் – மலேசியாவில் தடை நீங்கியது

Most Popular