விஸ்வரூபம் – மலேசியாவில் தடை நீங்கியது

viswaroopam‘விஸ்வரூபம்’ திரைப்படம் கடந்த மாதம் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் இந்த மாதம் 7ம் தேதி வெளியானது.

மலேசியாவில் கடந்த மாதம் 24ம் தேதியன்றே படம் திரையிடப்பட்டது. ஆனால் மலேசிய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதன் பேரில் மறுநாள் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

படத்தின் மீதான தடையை நீக்க வேண்டுமென பல அமைப்புகள் கேட்டு வந்தன.

இந்த நிலையில் ‘விஸ்வரூபம்’ படம் மீதான தடையை மலேசிய அரசாங்கம் நீக்கி விட்டது.  இதையடுத்து மலேசியாவில் விஸ்வரூபம் படம் திரையிடப்படுகிறது.

Read Previous

விஜய், மோகன்லால் நடிக்கும் ‘ஜில்லா’ மே மாதம் ஆரம்பம்

Read Next

முனி – 3 – மாறிய இசையமைப்பாளர் மாற்றியது யாரோ ?

Most Popular