ஹரிதாஸ் திரைப்படம் வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்னதாகவே பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது.
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனை வாழ்க்கையில் எப்படியாவது முன்னுக்கு கொண்டு வரத் துடிக்கும் ஒரு அப்பாவைப் பற்றிய கதை.
நாம் வில்லனாகவே பார்த்து வந்த கிஷோர் இந்த படத்தில் பாசமான அப்பாவாக நெகிழ வைக்கிறார்.
ஆட்டிசம் பாதித்த சிறுவனாக நடித்திருக்கும் பிரிதிவிராஜ் தாஸ் , பல விருதுகளைப் பெறப் போவது நிச்சயம்.
மாநகராட்சி பள்ளி ஆசிரியையாக அசத்தலாக நடித்திருக்கிறார் சினேகா. திருமணத்திற்குப் பின் ஒரு நடிகைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்காமல் ஒதுக்கி வைக்கும் தமிழ்த் திரையுலகில் சினேகாவுக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.
இயக்குனரின் நம்பிக்கையைப் புரிந்து கொண்டு அமுதவள்ளி டீச்சராகவே வாழ்ந்திருக்கிறார் சினேகா.
மகன்களை நல்ல நிலமைக்கு கொண்டுவர நினைக்கும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
தமிழ் சினிமாவில் இன்னும் நல்ல இயக்குனர்களும், நல்ல திரைப்படமும் வரும் என நம்பிக்கை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜிஎன்ஆர். குமரவேலன்
வரும் 22ம் தேதி வெள்ளியன்று இத் திரைப்படம் வெளியாகிறது…