விக்ரமிடம் மன்னிப்பு கேட்டார் ராணா….

vikramநடிகர் விக்ரமை கடுமையாக விமர்சித்த ராணா மன்னிப்பு கேட்டார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றில் தெலுங்கு நடிகர் ராணாவைப் பற்றி விக்ரம் குறிப்பிட்டுப் பேசியதற்கு விக்ரமை கடுமையான வார்த்தைளால் திட்டிப் பேசியிருந்தார் ராணா. இவருடைய பேச்சுக்கு பல தெலுங்கு இணையதளங்கள் ஆதரவான செய்தியையே வெளியிட்டன.

விக்ரமின் கருத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ராணாவும் பேசியிருந்தார்.

இந் நிலையில்  தான் பேசிய கடுமையான பேச்சுக்கு விக்ரமிடமும் அவருடைய ரசிகர்களிடம்  மன்னிப்பு கேட்டார் ராணா. விக்ரம் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் தொலைபேசியில் விக்ரமிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி….

 

Read Previous

‘அமீரின் ஆதி பகவன்’ ஆக்‌ஷன் படம்தான்… – ஜெயம் ரவி

Read Next

‘ஹரிதாஸ்’ படத்தில் அசத்தும் சினேகா

Most Popular