1. Home
  2. News

Category: News

‘சொன்னா புரியாது’ – 26 ரிலீஸ்…

சிவா, வசுந்தரா மற்றும் பலர் நடிக்க யதீஷ் மகாதேவ் இசையமைப்பில் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியிருக்கும் ‘சொன்னா புரியாது’ இம்மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் ‘தமிழ்ப் படம்’ இயக்குனர் சி.எஸ். அமுதனிடம் (உங்க ‘ரெண்டாவது படம்’ எப்பதான் வரும் ) உதவி இயக்குனராக…

‘பட்டத்து யானை’ – சந்தானம் ‘டபுள் ஆக்‌ஷன்’

விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் ‘பட்டத்து யானை’ படத்தில் சந்தானம் முதன் முறையாக இரு வேடங்களில் நடிக்கிறார். இதுநாள் வரை இதை ரகசியமாக வைத்திருந்தனர். நேற்றுதான் முறையாக அறிவித்துள்ளனர். ஒரு சந்தானம் இருந்தாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. இரு சந்தானம் வேறு, கேட்கவா வேண்டும். படத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த படத்தின்…

ஹீரோவாக போட்ட இயக்குனரை வெறுப்பேற்றிய சிவகார்த்திகேயன்

ஒரு நடிகருக்கோ, இயக்குனருக்கோ முதல் படம் என்பது கூட பெரிதல்ல. அவர்களின் இரண்டாவது படம்தான் அவர்களுடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் படமாக அமையும். அப்படி தன்னை ஹீரோவாக  ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் நடிக்க வைத்த இயக்குனர் எழிலை மேடையில் வைத்தே வெறுப்பேற்றியிருக்கிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில நடந்த ‘வருத்தப்படாத வாலிபர்…

ரஜினிகாந்த் பாராட்டிய ‘ஓம்’

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குத் திரையுலக சூப்பர் ஸ்டாராகவும் இருந்த என்டிஆரின் பேரன் கல்யாண் ராம், ஹீரோவாக நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘ஓம் -3D ’. இத்திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்திற்கு சென்னையில், பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், “சமீப காலங்களில்…

பொங்கல் வெளியீடாக ‘தலை 54’

தலைப்பைப் பார்த்து எதுவும் குழம்பிப் போய்விட வேண்டாம். அஜித் இப்ப நடிச்சிட்டிருக்கிற இரண்டு படத்துக்குமே இன்னும் பெயர் வைக்கலை. விஷ்ணுவர்தன் இயக்கத்துல அவர் நடிக்கிற படம் அஜித்துக்கு 53வது படம், அதனால ‘தலை 53’. இந்த படத்துக்கப்புறம் சிவா இயக்கத்துல நடிச்சிட்டிருக்கிற படம் ‘தலை 54’. இப்ப நாம…

ஷங்கரின் ‘ஐ’ 75 சதவீதம் முடிந்தது…

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர். ரகுமான் இசையமைப்பில், விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘ஐ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்துள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறாராம். மிக மிக ஒல்லியான தேகம், சராசரியான உடலமைப்பு,…

D Day – ஸ்ருதிஹாசனுக்கு பாராட்டு மழை…

‘ D Day ‘ என்ற ஹிந்திப் படத்தில் ஸ்ருதி ஹாசனின் நடிப்பைப் பார்த்து பாலிவுட் நட்சத்திரங்கள் பாராட்டித் தள்ளுகிறார்களாம். அர்ஜுன் ராம்பால், ரிஷி கபூர், இர்ஃபான் கான், யுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் பாகிஸ்தான் – கராச்சியைச் சேர்ந்த…

சிம்புவை காதலிக்கவில்லை – ஹன்சிகா

கடந்த சில நாட்களாக சிம்புவும், ஹன்சிகாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பரவலாக செய்தி பரவிற்று. சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றிலும் சிம்புவின் அப்பாவான டிஆர், சிம்பு ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த பரவலான பேச்சால்…

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி,’ ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படங்களுக்குப் பிறகு சிம்புதேவன் இயக்கவிருக்கும் படம் ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’. இந்த படத்தில் நாயகனாக அருள் நிதி நடிக்கிறார். ‘வம்சம்’ படத்தின் மூலம் அறிமுகமான அருள்நிதிக்கு இன்னும் சரியான படங்கள் அமையவில்லை.  இவர் நடித்துள்ள ‘தகராறு’ விரைவில்…

இசையமைப்பாளர்களை ஏமாற்றும் ஆடியோ கம்பெனிகள்

ராயல்டி விவகாரத்தில் இசையமைப்பாளர்களை ஆடியோ கம்பெனிகள் ஏமாற்றுவதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக டிவிட்டர் மூலம் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். “சில ஆடியோ கம்பெனிகள், இசையமைப்பாளர்களிடமிருந்தும், பாடலாசிரியர்களிடமிருந்தும்  ராயல்டியை திருடுகின்றன. இந்த திருட்டு குறித்து சீனியர் இசையமைப்பாளர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.  இசையமைப்பாளர்கள்…