ராயல்டி விவகாரத்தில் இசையமைப்பாளர்களை ஆடியோ கம்பெனிகள் ஏமாற்றுவதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது சம்பந்தமாக டிவிட்டர் மூலம் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
“சில ஆடியோ கம்பெனிகள், இசையமைப்பாளர்களிடமிருந்தும், பாடலாசிரியர்களிடமிருந்தும் ராயல்டியை திருடுகின்றன. இந்த திருட்டு குறித்து சீனியர் இசையமைப்பாளர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இசையமைப்பாளர்கள் யூனியனும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராயல்டி என்பது ஒரு கிரியேட்டரின் அடிப்படை உரிமை. இதை அவர்களிடமிருந்து திருடுவது மிகவும் மலிவானது.
பாடலாசிரியர்கள் தாமரை, நா. முத்துக்குமார், கபிலன், மதன் கார்க்கி ஆகியோர் இது சம்பந்தமாக விவாதித்து வருகிறோம்.
இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் ஒன்றிணைந்து அவர்களுக்கான உரிமையை மீட்க வேண்டும்,” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்ற இசையமைப்பாளர்களில் விஜய் ஆண்டனி இதற்கு முதலில் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.