ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்

oru-kanniyum-moondru-kalavanigalum

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி,’ ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படங்களுக்குப் பிறகு சிம்புதேவன் இயக்கவிருக்கும் படம் ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’.

இந்த படத்தில் நாயகனாக அருள் நிதி நடிக்கிறார். ‘வம்சம்’ படத்தின் மூலம் அறிமுகமான அருள்நிதிக்கு இன்னும் சரியான படங்கள் அமையவில்லை.  இவர் நடித்துள்ள ‘தகராறு’ விரைவில் வெளியாக இருக்கிறது.

நாயகிகளாக பிந்து மாதவி, ‘உதயம் என்எச் 4’  படத்தின் நாயகி அஷ்ரிதா ஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் சிம்புதேவன் கூறுகையில், “இந்த படம் ஒரு காதல், காமெடி படமாக உருவாகவிருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி, தொடர்ந்து பாண்டிச்சேரி, கேரளா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஒரு நகைச்சுவைக் கதையில் அழகான காதலை இணைத்துள்ளேன்,” என்றார்.

Read Previous

இசையமைப்பாளர்களை ஏமாற்றும் ஆடியோ கம்பெனிகள்

Read Next

சிம்புவை காதலிக்கவில்லை – ஹன்சிகா